Home
Mobile

அதிர போகுது மார்க்கெட்.. 50எம்பி கேமரா.. 512ஜிபி மெமரி.. வருகிறது புதிய சியோமி போன்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சியோமி நிறுவனம் விரைவில் சியோமி 15 (Xiaomi 15) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளன. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

சியோமி 15 அம்சங்கள் (Xiaomi 15 Specifications): 6.36-இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே (flat AMOLED Display) வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர போகுது மார்க்கெட்.. வருகிறது புதிய சியோமி போன்.. எந்த மாடல்?

அதேபோல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் உடன் இந்த புதிய சியோமி 15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த புதிய சியோமி 15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனில் HyperOS 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ( Android 15) இயங்குதள வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி OmniVision OV50Hசென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது இந்த சியோமி 15 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) போர்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த பான் அறிமுகமாகும்.

5500mAh பேட்டரி உடன் சியோமி 15 அறிமுகமாகும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான போன்.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சியோமி போன் வெளிவரும். அதேபோல் சியோமி 15 போன் ஆனது சற்று உயர்வான விலையில் தான் விற்பனைக்கு வரும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 15 Specifications Leaked Online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X