சைனீஸ் ஸ்பெஷல் ஸ்மார்ட்போன் விஷயத்தில் அந்தர் பல்டி அடிச்ச Xiaomi நிறுவனம்!
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் அதன் "சைனீஸ் ஸ்பெஷல்" ஸ்மார்ட்போன் (Chinese Special Smartphone) ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்து.. பல நிறுவனங்ககள் பின்பற்றும் ரீபிராண்டிங் பாணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படியான ஒரு வேலையை பார்த்து இருந்தது.
அந்த மாடல் - ஷாவ்மீ 14 சிவி (Xiaomi 14 Civi) ஸ்மார்ட்போன் ஆகும். இதை "சைனீஸ் ஸ்பெஷல்" என்று குறிப்பிட ஒரு காரணம், வழக்கமாக ஷாவ்மீ நிறுவனம் அதன் சிவி சீரீஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யும். அதாவது சிவி சீரிஸ் போன்கள் ஆனது பிரத்யேகமாக சீனாவில் மட்டுமே வாங்க கிடைக்கும்.

அந்த வழக்கத்தை உடைக்கும்படியாக ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. ஆனால் இப்போது ஷாவ்மீ நிறுவனம் தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டிருப்பதாக தெரிகிறது. ஸ்மார்ட்ப்ரைஸ் (SmartPrix) வழியாக வெளியான சமீபத்திய அறிக்கையின்படி, ஷாவ்மீ நிறுவனம் அதன் ஷாவ்மீ 15 சிவி (Xiaomi ) ஸ்மார்போனின் இந்திய அறிமுகத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கூறுகிறது
இருப்பினும் ஏன் ஷாவ்மீ 15 சிவி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என்பதற்கான சரியான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. ஷாவ்மீ 15 சிவி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், இது முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டு இருந்த ஷாவ்மீ 14சிவி மாடலை விட குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை (Upgrades) கொண்ட ஸ்மார்ட்போனாக இருந்திருக்கும்.
ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டூயல் சிம் (Dual SIM) ஆதரவு, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.55-இன்ச் 1.5கே கர்வ்டு AMOLED டிஸ்பிளே, 4என்எம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட், 12ஜிபி வரை LPDDR5 ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ், வழக்கமான வேப்பர் கூலிங் சிஸ்டம்களை (Vapor Cooling System) விட மூன்று மடங்கு திறமையாக செயல்படுவதாக கூறப்படும் ஐஸ்லூப் கூலிங் சிஸ்டம் (IceLoop Cooling System) போன்றவைகளை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, இபோது சம்மிலக்ஸ் லென்ஸுடன் இணைந்து லைகாவால் வடிவமைக்கப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Lieca Triple Rear Camera Setup) கொண்டுள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், எப்/1.63 அபெர்க்ஷர் மற்றும் 25மிமீ சமமான குவிய நீளம் கொண்ட 50-மெகாபிக்சல் லைட் ஃப்யூஷன் 800 இமேஜ் சென்சார் + 2எக்ஸ் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா + 12-மெகாபிக்சல் 120 டிகிரி வைட் ஆங்கிள் ஷூட்டர் உள்ளது. முன்பக்கத்தில் இரண்டு 32-மெகாபிக்சல் செல்பீ கேமராக்கள் உள்ளன.
இதுதவிர்த்து டால்பி அட்மோஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் (Dolby Atmos Stereo Speakers), இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஏஐ-ஆதரவு கொண்ட ஃபேஸ் அன்லாக் சிஸ்டம் (Face Unlock System) போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 67W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,700mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஷாவ்மீயின் கூற்றுப்படி இது 30 நிமிடங்களில் 80 சதவீதம் பேட்டரியை சார்ஜ் செய்யும்.
ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: க்ரூஸ் புளூ, மேட்சா க்ரீன் மற்றும் ஷேடோ பிளாக் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது: 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.42,999 மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஆப்ஷன் - ரூ.47,999. தற்போது பிளிப்கார்ட்டில் (Flipkart) ரூ.36,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








