Home
Mobile

அசரடிக்கும் Leica கேமரா.. ஆடிப்போக வைக்கும் விலை.. Xiaomi 14T, Xiaomi 14T Pro.. செப்.26-ல் அறிமுகம்!

Xiaomi 14T Series Global Launch: ஷாவ்மீ நிறுவனத்தின் டி-சீரீஸ் மாடல்களை "பவர்ஃபுல் ஸ்மார்ட்போன் சீரீஸ்" என்று குறிப்பிடுவதில் யாருக்கும் எந்த தயக்கமும் இருக்காது என்று நம்புகிறோம். அந்த அளவிற்கு தரமான அம்சஙகளை பேக் செய்யும் இந்த சீரீஸின் கீழ் அடுத்ததாக அறிமுகம் செய்யப்படவுள்ளது - ஷாவ்மீ 14டி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் தான். இந்த ஸ்மார்ட்போன்கள் எப்போது உலகளவில் அறிமுகம் செய்யப்படும்? இதன்கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள் வெளியாகும்? அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ஷாவ்மீ 14டி சீரிஸ் எப்போது அறிமுகமாகும்? சீன நிறுவனமான ஷாவ்மீ, அதன் ஷாவ்மீ 14டி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி அன்று உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை - அதன் சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கம் வழியாக - அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ 13டி மற்றும் ஷாவ்மீ 13டி ப்ரோ ஆகிய இரண்டும், கடந்த ஆண்டு இதே தேதியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டன.

Xiaomi 14T, Xiaomi 14T Pro.. செப்.26-ல் அறிமுகம்!

ஷாவ்மீ 14டி சீரீஸின் உலகளாவிய வெளியீட்டு நிகழ்வு ஜெர்மனியின் பெர்லினில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்காக ஷாவ்மீ நிறுவனம் ஒரு கவுண்ட்டவுன்-டைமர் பக்கத்தையும் உருவாக்கி உள்ளது. அந்த லேண்டிங் பேஜ் ஆனது வரவிருக்கும் மாடல்களில் லைகா பிராண்டால் ட்யூன் செய்யப்பட்ட கேமராக்கள் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஷாவ்மீ 14டி சீரிஸின் கீழ் என்னென்ன மாடல்கள் அறிமுகமாகும்? இந்த சீரீஸ் கடந்த ஆண்டு அறிமுகமான ஷாவ்மீ 13டி (Xiaomi 13T) மற்றும் ஷாவ்மீ 13டி ப்ரோ (Xiaomi 13T Pro) ஆகிய மாடல்களின் அப்கிரேடட் வெர்ஷன்களாக இருக்கும். அப்படியாக இந்த சீரீஸின் கீழ் ஷாவ்மீ 14டி (Xiaomi 14T) மற்றும் ஷாவ்மீ 14டி ப்ரோ (Xiaomi 14T Pro) என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

ஷாவ்மீ 14டி சீரிஸில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இவ்விரு ஸ்மார்ட்போன்களின் ஹேண்ட்-ஆன் வீடியோக்களும் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன. அதன் வழியாக ஷாவ்மீ 14டி மற்றும் ஷாவ்மீ 14டி ப்ரோ ஆகிய இரண்டுமே சதுர வடிவிலான கேமரா ஐலேண்ட்களுக்குள் வைக்கப்பட்டுள்ள லைகா-பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமராக்களுடன் வரும். ஷாவ்மீ 14டி ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8300 அல்ட்ரா (MediaTek Dimensity 8300 Ultra) சிப்செட்டில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியான லீக் வீடியோவில் வெண்ணிலா மாடல் கருப்பு நிறத்திலும், ப்ரோ மாடல் சில்வர் நிறத்திலும் காணப்பட்டது. பெரும்பாலும் இவ்விரு ஸ்மார்ட்போன்களும் அவற்றின் முன்னோடிகளை போன்ற வடிவமைப்பு மொழியை கொண்டிருப்பதாகவே தெரிகிறது, ஆனால் கேமரா அமைப்புகளில் சிறிய மாற்றங்கள் உள்ளன. முன்னரே குறிப்பிடப்படி லைகா-பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் சதுர வடிவ மாட்யூல்களில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன் வந்த லீக்ஸ் தகவல்களின்படி ஷாவ்மீ 14டி ப்ரோ கேமரா அமைப்பில் லைட் ஃப்யூஷன் 900 சென்சார் கொண்ட 1/1.31 இன்ச் ப்ரைமரி கேமரா + 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா + 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவைகள் இடம்பெறலாம்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை ஷாவ்மீ 14டி மற்றும் ஷாவ்மீ 14டி ப்ரோ ஆகிய இரண்டுமே 4000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். முன்னரே குறிப்பிட்டபடி வெண்ணிலா மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 8300 அல்ட்ரா சிப்செட் இடம்பெறலாம், அதே சமயம் ப்ரோ மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 பிளஸ் சிப்செட் இருக்கலாம்.

ஷாவ்மீ 14டி சீரீஸ் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஷாவ்மீ 14டி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.60,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் இருக்கும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ரூ.60,299 க்கு அறிமுகம் செய்யப்படலாம். ஷாவ்மீ 14டி ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.80,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் இருக்கும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ரூ.82,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 14T Xiaomi 14T Pro Global Launch on September 26 Leica Tuned Cameras Confirmed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X