Home
Mobile

மார்கெட் காலி.. பிப்.25 சம்பவம் உறுதி.. FUSION கேமரா.. OLED டிஸ்பிளே.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?

மார்கெட் அதிரும் விதமாக சியோமி 14 சீரிஸ் (Xiaomi 14 Series) போன்களின் குளோபல் வேரியண்ட் பிப்ரவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் சியோமி 14 (Xiaomi 14) போனானது, ஈஎம்விகோ (EMVCo) சர்டிபிகேஷனுக்கு வந்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

இந்த ஈஎம்விகோ சர்டிபிகேஷனில் சியோமி 14 போனானது, ஹைபர்ஓஎஸ் (HyperOS) சப்போர்ட்டுடன் அறிமுகம் செய்யப்படுவது, உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு ஏற்கனவே வெளியான சீன வேரியண்ட்டின் அம்சங்களை இந்த போனும் கொண்டிருக்கிறது. ஆகவே, சீனாவில் வெளியான இந்த போன்களின் அம்சங்கள் மற்றும் விலையை முதலில் பார்ப்போம்.

சம்பவம் உறுதி.. FUSION கேமரா.. OLED டிஸ்பிளே.. 120W சார்ஜிங் போன்!

சியோமி 14 அம்சங்கள் (Xiaomi 14 Specifications): இந்த போனில் 6.36 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப்செட் வருகிறது.

அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி என்று 3 வேரியண்ட் கொண்டிருக்கிறது. 50 எம்பி மெயின் (லைட் ப்யூஷன் 900 சென்சார்) கேமரா வருகிறது.

அதோடு 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் (சாம்சங் ஜேஎன்1 சென்சார்) + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா (சாம்சங் ஜேஎன்1 சென்சார்) கொண்டுள்ளது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா (ஓம்னிவிஷன் ஓவி32பி சென்சார்) வருகிறது. 4610mAh பேட்டரி கொண்டிருக்கிறது.

சம்பவம் உறுதி.. FUSION கேமரா.. OLED டிஸ்பிளே.. 120W சார்ஜிங் போன்!

இந்த பேட்டரிக்கு 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. மிட்நைட் பிளாக், வைட், ராக் கிரீன் மற்றும் ஸ்னோவ் மவுண்டெய்ன் பிங்க் ஆகிய கலர்கள் கொண்டுள்ளது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.45,810ஆக இருக்கிறது.

சியோமி 14 ப்ரோ அம்சங்கள் (Xiaomi 14 Pro Specifications): இந்த ப்ரோ போனில் 6.73 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சியோமி செராமிக் கிளாஸ் பாதுகாப்பு கொண்டிருக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் சிப்செட் வருகிறது.

அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் சியோமி ஹைபர் ஓஎஸ் (Xiaomi HyperOS) கொண்டுள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்டிருக்கிறது. முந்தைய போனின் கேமரா சிஸ்டம் போலவே இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சியோமி 14 ப்ரோ போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4880mAh பேட்டரி வருகிறது. அதோடு 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. பிளாக், ஒயிட் மற்றும் ராக் கிரீன் ஆகிய 3 கலர்களில் வருகிறது. இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.56,870ஆக இருக்கிறது.

இதே விலையில் மற்ற நாடுகளிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 25ஆம் தேதி குளோபல் வேரியண்ட்கள் வெளியான பிறகு ஒரு சில வாரங்களில் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பிப்ரவரி இறுதி வாரத்தில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் அறிமுகம் இருக்க வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi 14 With HyperOS Spotted EMVCo Certification Ahead February 25 Global Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X