Home
Mobile

சம்பவக்காரன் இவன்தான்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 90W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?

சியோமி பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட சியோமி 14 (Xiaomi 14) போனின் குளோபல் வேரியண்ட் அல்ட்ரா பிரீமியம் அம்சங்களுடன் வெளியாகிவிட்டது. இந்த சியோமி 14 போனின் முழு அம்சங்கள், விலை மற்றும் இந்திய வெளியீடு குறித்த முழு விவரங்கள் இதோ.

சியோமி 14 அம்சங்கள் (Xiaomi 14 Specifications): இந்த போனில் சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப் மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் வருகிறது.

சம்பவக்காரன் இவன்தான்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 90W சார்ஜிங் போன்!

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 6.36 இன்ச் (2670 x 1200 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதுமட்டுமல்லாமல், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Vision) கொண்டுள்ளது.

மேலும், 1920Hz PWM டிம்மிங் மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) சப்போர்ட் வருகிறது. லைட் ப்யூசன் 900 (Light Fusion 900) சென்சார், ஹைபர் ஓஐஎஸ் (Hyper OIS), லெய்கா சம்மிலக்ஸ் லென்ஸ் (Leica Summilux Lens) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

அதோடு 50 எம்பி இன்பினிட்டி லெய்கா டெலிபோட்டோ கேமராவானது (Infinity Leica Telephoto Camera), சாம்சங் ஜேஎன்1 சென்சாருடன் வருகிறது. 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பவக்காரன் இவன்தான்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 90W சார்ஜிங் போன்!

இந்த சியோமி 14 போனின் 4610mAh பேட்டரியானது, 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (Wired Fast Charging) சப்போர்ட்டுடன் வருகிறது. அதுமட்டுமல்லாமல், 50W வயர்லெஸ் சார்ஜிங், 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) வருகிறது.

IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர்ப்ரூஃப் சப்போர்ட் உள்ளது.ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வருகிறது.

8.20 மிமீ தடிமன் மற்றும் 193 கிராம் எடை வருகிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 7 (Wi-Fi 7) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. ஜேட் கிரீன் (Jade Green), பிளாக் (Black) மற்றும் வைட் (White) ஆகிய 3 கலர்களில் வருகிறது.

இந்த போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.89,725ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 98,795ஆகவும் இருக்கிறது. இந்த போனின் குளோபல் வேரியண்ட் இப்போது வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் மார்ச் 7ஆம் தேதி அறிமுகமாகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi 14 With 50MP Camera Goes Global Will Launch in India on March 7 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X