மிரளுது சீனா.. FUSION கேமரா.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 90W சார்ஜிங்.. 4610mAh பேட்டரி.. எந்த மாடல்?
சியோமி பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களுமே மூக்கில் விரல் வைக்கும் படி 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, ஓஎல்இடி டிஸ்பிளே, லெய்கா கேமரா, 90W சார்ஜிங், 4610mAh பேட்டரி போன்ற அதி பிரம்மாண்ட அம்சங்களுடன் சியோமி 14 போன் அறிமுகமாகியிருக்கிறது.
சியோமி 14 அம்சங்கள் (Xiaomi 14 Specifications): இந்த சியோமி போன் 6.36 இன்ச் (2670 x 1200 பிக்சள்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு எல்டிபிஓ (LTPO) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதோடு எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி சப்போர்ட் வருகிறது. இந்த போனில் சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப்செட் வருகிறது.
அதோடு அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த சியோமி 12 மாடலில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன.
அதேபோல 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த போனில் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய பிரம்மாண்ட டிரிபிள் ரியர் கேமரா (Triple Rear Camera) வருகிறது. ஆகவே, லைட் ப்யூஷன் 900 (Light Fusion 900) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு லெய்கா சம்மிலக்ஸ் லென்ஸ் (Leica Summilux Lens) கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிங் கேமரா மற்றும் சாம்சங் ஜேஎன்2 (Samsung JN1) சென்சார் கொண்ட 50 எம்பி இன்ஃபினிட்டி லெய்கா டெலிபோட்டோ கேமரா வருகிறது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமரா மாடலாகும். இந்த கேமராவில் 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஓம்னிவிஷன் ஓவி32பி (OmniVision OV32B) சென்சார் கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. இந்த கேமராவை போலவே, சியோமி 14 போனானது, பிரம்மாண்ட பேட்டரி செட்டப் கொண்டிருக்கிறது. ஆகவே, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4610mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேட்டரிக்கு 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப் கொண்டிருக்கிறது. இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. அதோடு, இன்பிராரெட் சென்சாரும் (Infrared Sensor) கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் வருகிறது. ப்ளூடூத், வை-பை, ஜிபிஎஸ், நாவ்ஐசி (NavIC) மற்றும் என்எப்சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சியோமி போன் மிட்நைட் பிளாக், ஒயிட், ராக் கிரீன் மற்றும் ஸ்னோ மவுண்டன் பிங்க் ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இதில், கிளாஸ் மற்றும் லெதர் பேக் பேனல் வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.45,810ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.49,250ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.52,310ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடலின் விலை ரூ.56,860ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு, ஆர்டருக்கு கிடைக்கிறது. ஐபோன்களுக்கு நிகரான டிசைன் மட்டுமல்லாமல், அதுபோன்ற கேமரா அம்சங்களையும் கொண்டிருப்பதால், இந்த போன்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாக வாய்ப்புள்ளது. இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








