மிரண்டு போவீங்க.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 16GB ரேம்.. 90W சார்ஜிங்.. 4610mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஓஎல்இடி டிஸ்பிளே, லெய்கா கேமரா, இன்பினிட்டி டெலிபோட்டோ, ஓம்னிவிஷன் செல்பீ, 90W சார்ஜிங், 4610mAh பேட்டரி போன்ற அதிரவிடும் அல்ட்ரா அம்சங்களை கொண்ட சியோமி 14 (Xiaomi 14) போனின் குளோபல் வெளியீடு விரைவில் நடக்க இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
சியோமி 14 அம்சங்கள் (Xiaomi 14 Specifications): இந்த போனின் டிஸ்பிளே அல்ட்ரா பிரீமியமாக இருக்கிறது. 6.36 இன்ச் (2670 x 1200 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதோடு எச்டிஆர்10பிளஸ் (HDR10+), டால்பி அட்மோஸ் (Dolby Vision) மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கொண்டிருக்கிறது. அதோடு ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப்செட் வருகிறது.
அதுமட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த சியோமி 14 போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட் வருகிறது.
இந்த சியோமியில் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. டிஸ்பிளேவை போலவே கேமரா சிஸ்டமும் மிரட்டலாகவே இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவானது, லைட் ப்யூஷன் 900 (Light Fusion 900) சென்சாருடன் வருகிறது. இந்த கேமராவில் லெய்கா சம்மிலக்ஸ் லென்ஸ் (Leica Summilux Lens) வருகிறது.

அதோடு 50 எம்பி லெய்கா அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் (Leica Ultra-wide Angle Lens) கேமரா வருகிறது. இந்த கேமராவில் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் வருகிறது. அதேபோல 50 எம்பி இன்பினிட்டி லெய்கா டெலிபோட்டோ கேமரா (Infinity Leica Telephoto Camera) கொண்டிருக்கிறது. இந்த கேமராவிலும் சாம்சங் ஜேஎன்1 சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கேமராவில் ஹைபர் ஓஐஎஸ் (Hyper OIS) டெக்னாலஜி, 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. 32 எம்பி செல்பீ கேமராவானது, ஓம்னிவிஷன் ஓவி32பி (OmniVision OV32B) சென்சாருடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது.
டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் 4 மைக்ரோபோன் அரேய் (Microphone Array) வருகிறது. இன்பிராரெட் சென்சார் கொண்டிருக்கிறது. இந்த சியோமி 14 போனில் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூப் வருகிறது.
இந்த போனில் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4610mAh பேட்டரி வருகிறது. அதோடு 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த சியோமி 14 போனில் மிட்நைட் பிளாக், ஓயிட், ராக் கிரீன் மற்றும் ஸ்னோவ் மவுண்டெயின் பிங்க் ஆகிய 4 கலர்கள் கிடைக்கிறது.
இந்த போனின் ஆரம்ப விலை ரூ.45,810 பட்ஜெட்டில் இருக்கிறது. இந்த அம்சங்கள் மற்றும் விலை சீனாவில் நிர்ணயிக்கப்பட்டதாகும். இதே பட்ஜெட்டில் மற்ற நாடுகளிலும் வெளியாக வாய்ப்புள்ளது. இப்போது, தாய்லாந்தின் என்பிடிசி (NBTC) சர்டிபிகேஷனுக்கு வந்துள்ளது. ஆகவே, குளோபல் வெளியீடு ஒரு சில மாதங்கள் இருக்கலாம்.
வரும் பிப்ரவரியில் நடைபெறும் மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் 2024 (Mobile World Congress 2024) நிகழ்வில், இந்த சியோமி 14 போன் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்புள்ளதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய கேமரா பிரியர்களிடையே இந்த போன் மிகப்பெரும் வரவேற்பு பெறலாம்.


Click it and Unblock the Notifications








