Home
Mobile

இவருதான் கேமரா ஹண்டர்.. OLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. FUSION கேமரா.. 90W சார்ஜிங்.. எந்த போன்?

அல்ட்ரா கேமரா சிஸ்டம் மட்டுமல்லாமல், ஒவ்வொரு கேமராவிலும் லெய்கா, லைட் ப்யூசன், சாம்சங் போன்ற பக்கா சென்சார்களுடன் வெளியாக இருக்கும் சியோமி 14 (Xiaomi 14) போனின் விலை மற்றும் ரேம் விவரங்கள் கசிந்து மார்கெட்டை அதிரவிட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

சியோமி 14 விலை (Xiaomi 14 Price): இந்த சியோமி போனானது, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரியுடன் வெளியாக இருக்கிறது. இந்த போனின் விலை ரூ.74,999ஆக நிர்ணயிக்கப்படுகிறது. இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.65,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வருகிறது.

OLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. FUSION கேமரா.. 90W சார்ஜிங்.. எந்த போன்?

இந்த போனின் அம்சங்களை சியோமி இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், இந்த போனின் குளோபல் வேரியண்ட் ஏற்கனவே வெளியாகிவிட்டதால், அதன் அம்சங்களே, இந்திய வேரியண்ட்டில் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றை இப்போது பார்ப்போம்.

சியோமி 14 அம்சங்கள் (Xiaomi 14 Specifications): இந்த சியோமியில் லைட் ப்யூசன் 900 (Light Fusion 900) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஹைபர் ஓஐஎஸ் (Hyper OIS) டெக்னாலஜி மற்றும் லெய்கா சம்மிலக்ஸ் லென்ஸ் (Leica Summilux Lens) சப்போர்ட் உள்ளது.

சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த டெலிபோட்டோ கேமராவிலும், சாம்சங் ஜேஎன்1 சென்சார் வருகிறது. 32 எம்பி செல்பீ கேமரா ஓவி32பி சென்சாருடன் (OV32B) வருகிறது. ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) சப்போர்ட் இருக்கிறது.

OLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. FUSION கேமரா.. 90W சார்ஜிங்.. எந்த போன்?

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப் கொண்டிருக்கிறது. பிரீமியம் கேமிங் பிரியர்களுக்கான அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது.

இந்த சியோமியில் 6.36 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவானது, 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. அதுமட்டுமல்லாமல், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 1920Hz PWM டிம்மிங் மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த மாடலில் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4610mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 50W வயர்லெஸ் சார்ஜிங், 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியோடு 193 கிராம் எடை மற்றும் 8.20 மிமீ தடிமன் வருகிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.

டைப்-சி ஆடியோ (Type-C Audio) சப்போர்ட் உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டிகள் வருகின்றன. அதேபோல வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS), நேவ்ஐசி (NavIC) மற்றும் என்எப்சி (NFC) ஆகிய கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது.

இந்த சியோமியில் ஜேட் கிரீன் (Jade Green), பிளாக் (Black) மற்றும் வைட் (White) ஆகிய 3 கலர்கள் இருக்கின்றன. இந்த போன் நாளை (மார்ச் 7) இந்தியாவில் வெளியாகிறது. அல்ட்ரா பிரீமியம் கேமரா போன்களின் டாப் லிஸ்டில் இந்த போனும் இடம் பெற வாய்ப்புள்ளது. அதேபோல கேமரா பிரியர்களிடையே நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 14 With 12GB RAM, 50MP Camera Launch on March 7 in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X