Home
Mobile

அதிர போகுது ஆர்டர்.. 50எம்பி கேமரா.. 90W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வருகிறது சியோமி போன்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் தனது சியோமி 14 போனின் இந்திய அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ட்ரிபிள் ரியர் கேமரா, 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் சியோமி 14 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

அதாவது இந்தியாவில் சியோமி 14 ஸ்மார்ட்போன் ஆனது வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகும். பின்பு இந்த ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்ற சாதனங்களும் வெளிவர வாய்ப்பு உள்ளது. இப்போது சியோமி 14 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதிர போகுது ஆர்டர்.. இந்தியாவுக்கு வருகிறது சியோமி போன்.. எந்த மாடல்?

சியோமி 14 அம்சங்கள் (Xiaomi 14 specifications): 6.36-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி 14 ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வசதியுடன் சியோமி 14 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் சிப்செட் வசதியுடன் இந்த சியோமி 14 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும்.

ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சியோமி 14 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சியோமி போன்.

அதிர போகுது ஆர்டர்.. இந்தியாவுக்கு வருகிறது சியோமி போன்.. எந்த மாடல்?

4610எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் சியோமி 14 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளுடன் இந்த அட்டகாசமான சியோமி 14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

அதேபோல் யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சியோமி போன். குறிப்பாக இந்தியாவில் சியோமி 14 ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Xiaomi 14 will be launched in India on March 7: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X