தவம் கிடந்தோம்.. இப்படி ஒரு சியோமி போனுக்கு.. சோனி கேமரா.. 90W சார்ஜிங். AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் அடுத்து ஒரு தரமான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது சியோமி 14 அல்ட்ரா எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் சியோமி 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra) ஸ்மார்ட்போனில் சில முக்கிய விவரக்குறிப்புகளை ஒரு டிப்ஸ்டர் ஆன்லைனில் வெளியிட்டுள்ளார். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி 14 அல்ட்ரா விவரக்குறிப்புகள் (Xiaomi 14 Ultra Specs): 50எம்பி Sony LYT900 பிரைமரி சென்சார் + அல்ட்ரா வைடு லென்ஸ் + டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்டபோன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.
இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த சியோமி போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

அதேபோல் 5180 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (90W wired charging support), 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ( 50W wireless charging support) வசதியும் உள்ளன. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் விரைவாக இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியைக் கொண்டு இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இயங்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
6.7-இன்ச் 2கே AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த சியோமி 14 அல்ட்ரா போன் வெளிவரும். பின்பு டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1400 நிட்ஸ் ப்ரைட்னஸ்,240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

குறிப்பாக 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் (in-display fingerprint scanner), டால்பி ஆடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, IP68 ரேட்டிங் கொண்டுள்ளது இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன். பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த அசத்தலான சியோமி 14 அல்ட்ரா போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








