யாரு சாமி அவன்.. QUAD கேமரா.. OLED டிஸ்பிளே.. 90W சார்ஜிங்.. 5180mAh பேட்டரி.. எந்த மாடல்?
சியோமி 14 (Xiaomi 14), சியோமி 14 ப்ரோ (Xiaomi 14 Pro) போன்களின் வெளியீட்டுக்கு பிறகு சியோமி 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra) போன் மீதான எதிர்பார்ப்பு மார்கெட்டை மிரளவைத்துள்ளது. இதன் வெளியீடு மற்றும் கேமரா விவரங்கள் கசிந்துவிட்டன.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சியோமி 14 சீரிஸ் (Xiaomi 14 Series) போன்கள் சீனாவில் வெளியாகின. ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே, லெய்கா (Leica) டெலிபோட்டோ கேமரா, ஹைபர்ஓஎஸ், 120W பாஸ்ட் சார்ஜிங் போன்ற ஒட்டுமொத்த பிரீமியம் அம்சங்களுடன் மார்கெட்டை மிரள விட்டன.

ஆனால், இதைவிட பிரீமியமாக சியோமி 14 அல்ட்ரா வேரியண்ட் இருக்குமென்ற தகவல் ஸ்மார்ட்போன் மார்கெட்டில் வெளியாகி சியோமி பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களையும் அறக்க பறக்க செய்தது. இந்த சூழலில் அந்த போன் வேர்ல்டு மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் வெளியாகுமென்று தகவல் கசிந்துள்ளது.
இந்த எம்டபுள்யூ 2024 (MWC 2024) நிகழ்வானது, பார்சிலோனாவில் பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தகவல் மட்டுமல்லாமல், சியோமி 14 அல்ட்ரா போனின் கேமரா விவரங்களும் கசிந்துவிட்டது. இந்த விவரங்களோடு, இதுவரையில் கசிந்த அனைத்து அம்சங்களையும் இப்போது பார்க்கலாம்.
சியோமி 14 அல்ட்ரா அம்சங்கள் (Xiaomi 14 Ultra Specifications): இந்த அல்ட்ரா வேரியண்ட்டில் குவாட் ரியர் கேமரா சிஸ்டம் (Quad Rear Camera System) வருகிறது. 50 எம்பி மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 900 (Sony LYT-900) சென்சார் வருகிறது. அதோடு 120 மிமீ பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வருகிறது.
இந்த கேமராவில் லைகா சம்மிலக்ஸ் லென்ஸ் (Leica Summilux Lens) மற்றும் சாம்சங் சென்சார்களும் இடம்பெறுகிறது. அதேபோல ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப்செட் வருகிறது.
இந்த சியோமி 14 அல்ட்ராவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2K ரெசொலூஷன் கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே வருகிறது. 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5180mAh பேட்டரி வருகிறது. அதோடு 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட் வெளியாகிறது.
இந்த அம்சங்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. இருப்பினும், சியோமி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. இதன் மற்ற அம்சங்கள் சியோமி 14 ப்ரோ போனை போலவே இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, அதன் முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம். ப்ரோ மாடலில் 32 எம்பி ஓம்னிவிஷன் செல்பீ கேமரா வருகிறது.
டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் உள்ளது. 6.73 இன்ச் சியோமி செராமிக் கிளாஸ் (Xiaomi Ceramic Glass) பாதுகாப்பு கொண்ட டிஸ்பிளே வருகிறது. பிரீமியம் கேமிங் பிரியர்களுக்கான அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனின் ஆரம்ப விலையானது, ரூ.56,870ஆக இருக்கிறது.
ஆகவே, சியோமி 14 அல்ட்ரா வேரியண்ட்டின் விலை ரூ.65,000 முதல் ரூ.75,000 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது. இந்த சியோமி 14 ப்ரோ மாடலே அல்ட்ரா போனானது, குவாட் கேமரா சிஸ்டம் கொண்டிருப்பதால், சியோமி 13 அல்ட்ரா போனை போன்ற டிசைனில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








