யாரு சாமி அவன்.. QUAD கேமரா.. SONY சென்சார்.. LEICA லென்ஸ்.. 8K ரெக்கார்டிங்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சாம்ராஜ்ஜியமே அதிரும் விதமாக லெய்கா சம்மிலக்ஸ் லென்ஸ், சோனி சென்சார்கள், பெரிஸ்கோப் டெலிபோட்டோ கொண்ட குவாட் கேமராக்களுடன் சியோமி 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra) வெளியாக இருக்கிறது. அதோடு விலை விவரங்களும் கசிந்துள்ளன. இதுகுறித்த விவரம் இதோ.
பிப்ரவரி 25ஆம் தேதி நடக்கவிருக்கும் மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் 2024 (Mobile World Congress 2024) நிகழ்வில், சியோமி 14 அல்ட்ரா போன் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதற்கு முன்னதாக அந்த போனின் கேமரா மற்றும் விலை விவரங்கள் மார்கெட் வட்டாரங்களில் கசிந்து மிரள விட்டுள்ளது.

இந்த சியோமி அல்ட்ராவானது, குவாட் ரியர் கேமரா சிஸ்டம் (Quad Rear Camera System) கொண்டுள்ளது. சோனி எல்ஒய்டி 900 (Sony LYT 900) சென்சார் மற்றும் லெய்கா சம்மிலக்ஸ் லென்ஸ் (Leica Summilux Lens) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
சோனி ஐஎம்எக்ஸ்858 (Sony IMX858) சென்சாருடன் 50 எம்பி லெய்கா அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. இந்த சோனி ஐஎம்எக்ஸ்858 சென்சாருடனயே 50 எம்பி லெய்கா டெலிபோட்டோ கேமரா மற்றும் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (Periscope Telephoto Camera) வருகிறது.
இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. இந்த அம்சங்கள் மட்டுமே டிசைனுடன் கசிந்துள்ளன. இந்த சியோமி போனின் டிசைனை பார்க்கையில், லெதர் பேக் பேனல் வருகிறது. டைட்டானியம் மெட்டல் மிடில் பிரேம் (Titanium Metal Middle Frame) கொண்டிருக்கிறது.
டபுள்-சைடு சியோமி டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் டிசைன் கொண்டுள்ளது. பிளாக் மற்றும் ஒயிட் கலர்கள் கொண்டிருக்கிறது. இந்த கலர் மற்றும் டிசைனில் போட்டோக்கள் வெளியாகி மார்கெட்டை அதிர வைத்துள்ளது. ஆனால், இவை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டவில்லை. இப்போது, ஏற்கனவே கசிந்த அம்சங்களை பார்ப்போம்.
சியோமி 14 அல்ட்ரா அம்சங்கள் (Xiaomi 14 Ultra Specifications): இந்த சியோமியில் 6.73 இன்ச் (3100 x 1440 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10 பிளஸ், டால்பி விஷன் மற்றும் சியோமி செராமிக் கிளாஸ் பாதுகாப்பு (Xiaomi Ceramic Glass Protection) கொண்டிருக்கிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. சியோமி ஹைபர்ஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டிருக்கிறது. அட்ரினோ 750 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் சிப்செட் கொண்டுள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், இன்பிராரெட் சென்சார், டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டிருக்கிறது.
IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப் வருகிறது. 5,300mAh பேட்டரி கொண்டுள்ளது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போனின் 16 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.1,33,900ஆக இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications