Home
Mobile

மிரண்டு போவீங்க.. QUAD கேமரா.. SONY பெரிஸ்கோப்.. OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 90W சார்ஜிங்.. எந்த மாடல்?

டிஎஸ்எல்ஆர் கேமராவுக்கு நிகரான லென்ஸ் மற்றும் சென்சார்கள் மட்டுமல்லாமல், போட்டோகிராபி கிட், ஓஎல்இடி டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், ஹைபர்ஓஎஸ், 80W வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அல்ட்ரா பிரீமியம் அம்சங்களுடன் சியோமி 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra) போன் அறிமுகமாகியிருக்கிறது.

சியோமி 14 அல்ட்ரா அம்சங்கள் (Xiaomi 14 Ultra Specifications): 6.73 இன்ச் (3200 x 1440 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

QUAD கேமரா.. SONY பெரிஸ்கோப்.. OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த போன்?

அதோடு எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Vision), டிசி டிம்மிங் (DC Dimming) மற்றும் சியோமி செராமிக் கிளாஸ் (Xiaomi Ceramic Glass) பாதுகாப்பு வருகிறது. சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் சிப்செட் வருகிறது.

அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கிறது. டூயல் நானோ சிம் சிலாட் மட்டுமே வருகிறது. எஸ்டிகார்டு சிலாட் கொடுக்கப்படவில்லை.

50 எம்பி மெயின் கேமரா (சோனி எல்ஒய்டி 900 சென்சார்) + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்858 சென்சார்) + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்858 சென்சார்) + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்858 சென்சார்) கொண்டிருக்கிறது.

QUAD கேமரா.. SONY பெரிஸ்கோப்.. OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த போன்?

இந்த குவாட் கேமரா சிஸ்டமானது (Quad Camera System) ஹைபர் ஓஐஎஸ் (Hyper OIS), லெய்கா சம்மிலக்ஸ் லென்ஸ் (Leica Summilux Lens) மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது. அதேபோல வைடு ஆங்கிள் கேமராவில் சூப்பர் மேக்ரோ (Super Macro) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓம்னிவிஷன் ஓவி32பி40 (OmniVision OV32B40) சென்சாருடன் 32 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஹை-பை ஆடியோ (Hi-Res Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் உள்ளது.

IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. 5300mAh பேட்டரி கொண்டுள்ளது. 90W வயர்டு சார்ஜிங், 80W வயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. லெதர் (Leather), செராமிக் (Ceramic) மற்றும் டைட்டானியம் (Titanium) என்று 3 பேக் பேனல் டிசைன் கொண்டிருக்கிறது.

டிராகன் கிரிஸ்டல் ப்ளூ (Dragon Crystal Blue), பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.74,885ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.80,650ஆகவும் இருக்கிறது.

அதேபோல 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடலின் விலை ரூ.91,405ஆக இருக்கிறது. இப்போது, சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 27ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 16ஜிபி+ 1டிபி கொண்ட டைட்டானியம் வெர்ஷன் மார்ச் 12ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi 14 Ultra With 16GB RAM Launched in China Sale From February 27 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X