மார்க்கெட்டே திணறப்போகுது.. 50MP கேமரா.. 90W சார்ஜிங்.. பிப்.22-ல் வரும் சியோமி போன்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனத்தின் சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அறிமுகம் தேதி வெளியாகி உள்ளது. குறிப்பாக குவாட்-ரியர் கேமரா, IP68 ரேட்டிங், ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். இப்போது சியோமி 14 அல்ட்ரா போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.
முதலில் சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது வரும் பிப்ரவரி 22-ம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போன் வரும் பிப்ரவரி 25-ம் தேதி உலகசந்தையில் MWC 2024 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த சியோமி 14 அல்ட்ரா போன் உலக சந்தையிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

சியோமி 14 அல்ட்ரா அம்சங்கள் (Xiaomi 14 Ultra specifications): 6.7-இன்ச் 2கே AMOLED டிஸ்பிளே வசதியுடன் சியோமி 14 அல்ட்ரா போன் அறிமுகமாகும். பின்பு இந்த டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியைக் கொண்டு இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு லென்ஸ் + டெலிபோட்டோ லென்ஸ் + டெப்த் சென்சார் என்கிற லெய்கா குவாட் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த சியோமி போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் என 2 வேரியண்ட்களில் சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் (in-display fingerprint scanner), டால்பி ஆடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

அதேபோல் இந்த போனின் பேட்டரி வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம். IP68 ரேட்டிங் கொண்டுள்ளது இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன். பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த அசத்தலான சியோமி 14 அல்ட்ரா போன் அறிமுகமாகும்.
5180 எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (90W wired charging support), 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ( 50W wireless charging support) வசதியும் உள்ளன. குறிப்பாக இந்த போன் சற்று உயர்வான விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications