Home
Mobile

விஸ்வரூப மாடல்.. கேமராக்கும் மேல.. 50MP டெலிபோட்டோ.. 50MP பெரிஸ்கோப்.. 5300mAh பேட்டரி.. எந்த போன்?

ஒட்டுமொத்த கேமரா போன்களையும் தூக்கிசாப்பிடும்படி குவாட் ரியர் சிஸ்டம், சோனி சென்சார், 5X ஆப்டிகல் ஜூம், 120மிமீ போகல் லென்த், 8K வீடியோ ரெக்கார்டிங் மட்டுமல்லாமல், போட்டோகிராபி கிட் போன்ற அம்சங்களுடன் சியோமி 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra) வெளியாகிறது.

சியோமி 14 அல்ட்ரா அம்சங்கள் (Xiaomi 14 Ultra Specifications): இந்த சியோமி போனில் 6.73 இன்ச் (3100 x 1440 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்டிபிஓ (LTPO) டிஸ்பிளே மாடலாகும். சியோமி செராமிக் கிளாஸ் புரொடெக்சன் (Xiaomi Ceramic Glass Protection) கொண்டுள்ளது.

50MP டெலிபோட்டோ.. 50MP பெரிஸ்கோப்.. 5300mAh பேட்டரி.. எந்த போன்?

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப்செட் கொண்டுள்ளது. இந்த சியோமியில் குவாட் ரியர் கேமரா சிஸ்டம் (Quad Rear Camera System) வருகிறது. சோனி எல்ஒய்டி 900 (Sony LYT 900) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

இந்த கேமராவில் லெய்கா சம்மிலக்ஸ் லென்ஸ் (Leica Summilux Lens) வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்858 (Sony IMX858) சென்சார் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்டுள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்858 சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.

அதேபோல 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ (Periscope Telephoto) கேமரா வருகிறது. இந்த கேமராவில் 120மிமீ போகல் லென்த் (Focal Length), 5X ஆப்டிகல் ஜூம் (Optical Zoom), ஓஐஎஸ் (OIS) மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

50MP டெலிபோட்டோ.. 50MP பெரிஸ்கோப்.. 5300mAh பேட்டரி.. எந்த போன்?

5,300mAh பேட்டரி கொண்டிருகிறது. டி1 சிக்னல் என்ஹான்ஸ்மெண்ட் சிப் (T1 Signal Enhancement Chip) வருகிறது. இந்த சிப் மூலம் செல்லுலார் பர்ஃபாமென்ஸ் (Cellular Performance) 37 சதவீதம் அதிகமாக கிடைக்கும். அதேபோல வை-பை மற்றும் ப்ளூடூத் பர்ஃபாமென்ஸ் (Wi-Fi & Bluetooth Performance) 16 சதவீதம் அதிகமாக இருக்கும்.

அதேபோல 2 வே சாட்டிலைட் கம்யூனிகேஷன் சப்போர்ட் கொண்டிருக்கிறது. அல்ட்ரா ப்ரீமியம் குவாட் கேமரா வருவதால், இந்த போனோடு போட்டோகிராபி கிட் (Photography Kit) வழங்கப்பட இருக்கிறது. இந்த விவரங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இருப்பினும், மற்ற அம்சங்கள் மார்கெட் வட்டாரங்களில் கசிந்துள்ளன.

இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் சியோமி ஹைபர்ஓஎஸ் வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி ஆகிய வேரியண்ட்கள் வர இருக்கின்றன. 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது.

அதேபோல 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வருகின்றன. பிரீமியம் லெதர் பேக் பேனல் டிசைனில் (Premium Leather Back Panel Design) ஒயிட் (White) மற்றும் பிளாக் (Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த சியோமி அல்ட்ராவின் 16 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.1,33,900ஆக இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. பிப்ரவரி 25ஆம் தேதி நடக்க இருக்கும் மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் 2024 (Mobile World Congress 2024) நிகழ்வில், இந்த போனின் குளோபல் வேரியண்ட் வெளியாகிறது. அதற்கு முன்னதாக சீனாவில் வெளியாகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi 14 Ultra To Launch With 5300mAh Battery, 50MP Camera Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X