Home
Mobile

அதிர போகுது மார்க்கெட்.. Leica கேமரா.. 90W சார்ஜிங்.. 512ஜிபி மெமரி.. வருகிறது புதிய சியோமி போன்.. எந்த மாடல்?

சியோமி எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் புதிய டீசர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் லெய்கா (Leica) கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் உடன் அற்புதமான புகைப்படங்களை எடுக்க தயாராகுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்நிறுவனம் விரைவில் சியோமி 14 அல்ட்ரா போனை அறிமுகம் செய்ய உள்ளது.

எனவே தான் தற்போது இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக லெய்கா கேமரா அமைப்புடன் சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாதம் நடைபெற இருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2024 நிகழ்வில் தான் சியோமி 14 அல்ட்ரா போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

அதிர போகுது மார்க்கெட்.. Leica கேமரா.. வருகிறது புதிய சியோமி போன்..

சியோமி 14 அல்ட்ரா அம்சங்கள் (Xiaomi 14 Ultra specifications): இந்த சியோமி 14 அல்ட்ரா போன் 6.7-இன்ச் 2கே AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். பின்பு இந்த டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாகஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியைக் கொண்டு இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு லென்ஸ் + டெலிபோட்டோ லென்ஸ் + டெப்த் சென்சார் என்கிற லெய்கா குவாட் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்டபோன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த சியோமி போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் என 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் (in-display fingerprint scanner), டால்பி ஆடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

அதிர போகுது மார்க்கெட்.. Leica கேமரா.. வருகிறது புதிய சியோமி போன்..

IP68 ரேட்டிங் கொண்டுள்ளது இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன். பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த அசத்தலான சியோமி 14 அல்ட்ரா போன் அறிமுகமாகும் அதேபோல் இந்த போனின் பேட்டரி வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

அதன்படி 5180 எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (90W wired charging support), 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ( 50W wireless charging support) வசதியும் உள்ளன. அதேபோல் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 14 Ultra to be launched in India soon: Teaser released with Leica partnership
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X