Home
Mobile

அசரவைக்கும் சியோமி.. Leica கேமரா.. டைட்டானியம்.. 90W சார்ஜிங்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?

சியோமி நிறுவனத்தின் சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது வரும் டிசம்பர் 25-ம் தேதி அன்று உலக சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உடன் சியோமி 14 மற்றும் சியோமி 14 ப்ரோ போன்களும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் நிறங்கள் மற்றும் அம்சங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி டைட்டானியம் (titanium) வெள்ளை மற்றும் நீல நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதிலும் வெள்ளை நிறம் கொண்ட சியோமி 14 அல்ட்ரா மாடல் லெதர் பேக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அசரவைக்கும் சியோமி.. Leica கேமரா.. டைட்டானியம்.. எந்த மாடல்?

சியோமி 14 அல்ட்ரா மாடலின் டாப் எண்ட் மாடல் ரூ.84,000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான சியோமி 14 அல்ட்ரா போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி 14 அல்ட்ரா அம்சங்கள் (Xiaomi 14 Ultra specifications): ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியைக் கொண்டு இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி என 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் (in-display fingerprint scanner), டால்பி ஆடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு லென்ஸ் + டெலிபோட்டோ லென்ஸ் + டெப்த் சென்சார் என்கிற லெய்கா குவாட் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்டபோன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

IP68 ரேட்டிங் கொண்டுள்ளது இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன். பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த அசத்தலான சியோமி 14 அல்ட்ரா போன் அறிமுகமாகும் அதேபோல் இந்த போனின் பேட்டரி வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

அசரவைக்கும் சியோமி.. Leica கேமரா.. டைட்டானியம்.. எந்த மாடல்?

5180 எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (90W wired charging support), 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ( 50W wireless charging support) வசதியும் உள்ளன. அதேபோல் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் விற்பனைக்கு வரும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த போனில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 14 Ultra Could Come in Leather, Titanium colour options: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X