தூள் கிளப்பும் சியோமி.. 90W சார்ஜிங்.. 1டிபி மெமரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் தனது சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அடுத்த வருடம் துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சில முக்கியமான விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 5180எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜிங் 90 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

இதுதவிர 50 வாடஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மாார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேசமயம் இந்த பேட்டரியை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
அதேபோல் 6.7-இன்ச் 2கே AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவரும். அதுவும் பஞ்ச்-ஹோல் கட்அவுட் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மாார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், டால்பி ஆடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி Sony LYT-900 பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும்.
இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. எனவே சியோமி 14 அல்ட்ரா ஸ்மாார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் IP68 ரேட்டிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மாார்ட்போன். மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன. குறிப்பாக சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் தான் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








