மிரள வைக்கும் சியோமி.. 50MP அல்ட்ரா வைடு கேமரா.. 16GB ரேம்.. 1டிபி மெமரி.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) நிகழ்வில் சியோமி 14 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சியோமி 14 ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
சியோமி 14 அம்சங்கள் (Xiaomi 14 specifications): 6.36-இன்ச் 1.5கே சி8 எல்டிபிஒ ஒஎல்இடி டிஸ்பிளே (1.5K C8 LTPO OLED display) வசதியுடன் இந்த சியோமி 14 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (3000 nits peak brightness), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), கார்னிங் கொரில்லா விக்டஸ் (Gorilla Glass Victus) பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 chipset) வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி 14 ஸ்மார்ட்போன். இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் ஆனது பல்வேறு புதிய அம்சங்களை வழங்கும், அதேசமயம் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவுக்கு வரும் சியோமி 14 மாடல்.
ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் இந்த சியோமி 14 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக Leica பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சியோமி 14 மாடல். அதன்படி 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா கொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட்போன்.
4610எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த சியோமி 14 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

5ஜி, யுஎஸ்பி 3.2 ஜென் 1, வைஃபை 7, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சியோமி 14 ஸ்மார்ட்போன். மேலும் ஐபி68 ரேட்டிங் (IP68 rating) மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனில் டால்பி ஆடியோ வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சிறப்பு அம்சங்களுடன் சியோமி 14 ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களுடன் இந்த சியோமி 14 போனில் உள்ளது. அதேபோல் சியோமி நிறுவனம் அடுத்த ஆண்டு பல அசத்தலாக ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








