மார்கெட் காலி.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 120W சார்ஜிங்.. 4880mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்தியா மட்டுமல்லாமல், உலக ஸ்மார்ட்போன் மார்கெட்டே அதிரும்படியான அம்சங்களுடனும் ஆப்பிள் போன்களுக்கு நிகரான கேமராவுடனும் சியோமி 14 ப்ரோ (Xiaomi 14 Pro) போன் பிரம்மாண்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, 120W சார்ஜிங், ஓஎல்இடி டிஸ்பிளே என்று பின்னியெடுக்கிறது.
சியோமி 14 ப்ரோ அம்சங்கள் (Xiaomi 14 Pro Specifications): இந்த சியோமி ப்ரோ மாடலானது, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. அதோடு சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) வருகிறது.

இந்த சியோமி போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி ஆகிய மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. அதோடு 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டைட்டானியம் ஸ்பெஷல் எடிஷன் மாடலும் விற்பனைக்கு வருகிறது.
இந்த ப்ரோ மாடலில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.73 இன்ச் (3100 x 1440 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எல்டிபிஓ (LTPO) மாடல் டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு டால்பி விஷன் (Dolby Vision), 1920Hz PWM டிம்மிங் வருகிறது.
மொத்தமாக சியோமி செராமிக் கிளாஸ் பாதுகாப்பு (Xiaomi Ceramic Glass Protection) வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் லைட் ப்யூசன் 900 (Light Fusion 900) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் லெய்கா சம்மிலக்ஸ் (Leica Summilux) லென்ஸ் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிங் கேமரா வருகிறது. அதோடு சாம்சங் ஜேஎன்2 (Samsung JN1) சென்சாருடன் 50 எம்பி இன்ஃபினிட்டி லெய்கா (Infinity Leica) டெலிபோட்டோ கேமரா வருகிறது.

அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி32பி (OmniVision OV32B) சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட்டும், மெயின் கேமராவில் 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு ஓஐஎஸ் கேமரா மாடலாகும். இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் உள்ளது.
இந்த சியோமி போன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4880mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் வருகிறது. இந்த போன் 223 கிராம் எடைக் கொண்டுள்ளது. அதேபோல டைட்டானியம் மாடலின் எடை 230 கிராமாக இருக்கிறது.
இந்த சியோமி போனுக்கு IP68 தர வாட்டர் மற்றுமம் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் பிளாக், வைட் மற்றும் ராக் கிரீன் ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் 12ஜிபி+256ஜிபி மாடலின் விலை ரூ.56,870ஆகவும், 16ஜிபி+512ஜிபி மாடலின் விலை ரூ.63,055ஆகவும், 16ஜிபி+1டிபி மாடலின் விலை ரூ.68,250ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல 16ஜிபி+1டிபி கொண்ட டைட்டானியம் மாடலின் விலை ரூ.73,935ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் சீனாவில் ஆர்டருக்கு வந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆப்பிள், சாம்சங் போன்களுக்கு அடுத்தப்படியாக பிரம்மாண்ட கேமரா மற்றும் டிசைன் கொண்ட போன் வேண்டுமானால், இந்த சியோமி 14 ப்ரோ மாடல் நல்ல தேர்வாகும்.


Click it and Unblock the Notifications








