Home
Mobile

இதுக்கு மேல என்ன வேணும்? 120W சார்ஜிங், பெரிஸ்கோப் ஜும், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் புதிய போன்!

"இதுவே போதும்.. இதுக்கு மேல வேற ஒன்னும் வேண்டாம்!" என்று கூற வைக்கும்படியாக தரமான அம்சங்களுடன் 2 புதிய சியோமி (Xiaomi) ஸ்மார்ட்போன்கள் அறிமுகத்திற்கு தயாராக உள்ளன. அதென்ன ஸ்மார்ட்போன்கள்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? எப்போது அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:

நாம் இங்கே பேசுவது சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். இதன் கீழ் சியோமி 14 (Xiaomi 14) மற்றும் சியோமி 14 ப்ரோ (Xiaomi 14 Pro) என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி. ஏனென்றால், முன்னதாக அறிமுகமான சியோமி 13 சீரீஸிலும் 2 மாடல்கள் அறிமுகமாகின.

120W சார்ஜிங், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் புதிய போன்!

அதுமட்டுமின்றி, சியோமி 13 சீரிஸ் உடன் ஒப்பிடும்போது சியோமி 14 சீரீஸ் போன்கள் ஆனது பெரிய பேட்டரிகள் மற்றும் வேகமான சார்ஜிங் ஸ்பீடை (Charging Speed) வழங்கும் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. சைனீஸ் டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக சில துல்லியமான தகவல்களும் வெளியாகியுள்ளன.

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, சியோமி 14 ஸ்மார்ட்போனானது 4,860mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். அது 90W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை வழங்கும். மறுகையில் உள்ள சியோமி 14 ப்ரோவானது 120W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான (Wireless Charging) ஆதரவுடன் 5,000mAh பேட்டரியுடன் வரும்.

முன்னரே குறிப்பிட்டபடி, சியோமி 14 சீரிஸின் பேட்டரி அளவு மற்றும் சார்ஜிங் ஸ்பீட் ஆனது சியோமி 13 சீரீஸ் உடன் ஒப்பிடும் போது நல்ல அப்கிரேட்டை பெற்றுள்ளது. நினைவூட்டும் வண்ணம், சியோமி 13 ஆனது 67W சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை கொண்டுள்ளது.

மறுகையில் சியோமி 13 ப்ரோவானது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை கொண்டுள்ளது. ஆனால் அது சற்றே சிறிய 4,820mAh பேட்டரியை கொண்டுள்ளது. இருப்பினும் இந்த இரண்டு சியோமி 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுமே 50W வயர்லெஸ் சார்ஜிங்கை வழங்குகின்றன. ஒப்பீட்டளவில் இது நல்ல முன்னேற்றமாகும்.

எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, சியோமி 14 சீரிஸின் 2 ஸ்மார்ட்போங்களுமே ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் அடுத்த தலைமுறை முதன்மை சிப்செட் ஆகும்.

கேமராக்களை பொறுத்தவரை சியோமி 14 சீரீஸில் பெரிஸ்கோப் ஜூமிங் திறன்கள் (Periscope zoom capabilities) சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது சியோமி 14 ப்ரோவின் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவானது 115 மிமீ ஃபோக்கல் லெங்த் (115mm Focal Length) உடனான 5x ஆப்டிகல் ஜூமை வழங்கும்.

மறுகையில் உள்ள சியோமி 14 ஆனது 3.9x ஆப்டிகல் ஜூம் மற்றும் 90மிமீ ஃபோக்கல் லெங்த்தை வழங்கும் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை கொண்டிருக்கும். அறிமுகத்தை பொறுத்தவரை, சியோமி 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது வருகிற 2023 நவம்பரில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 14 Pro To Get 5000mAh Battery 120W Charging Snapdragon 8 Gen 3 SoC Periscope Telephoto Camera
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X