புதுசு வந்ததும் பழைய மாடல் மீது ரூ.20,000 விலை குறைப்பு.. Xiaomi-யின் தரமான செய்கை.. எந்த மாடல்?
ஷாவ்மீ நிறுவனம் அதன் ஷாவ்மீ 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன்கீழ் ஷாவ்மீ 15 (Xiaomi 15) மற்றும் ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) என 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இரண்டுமே மார்ச் 19 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்ய கிடைக்கும். பின்னர் ஏப்ரல் 2 முதல் விற்பனைக்கும் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மாடல் அறிமுகமாகி உள்ள நிலையில் பழைய ஷாவ்மீ 14 (Xiaomi 14) ஸ்மார்ட்போன் ஆனது ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. ஷாவ்மீ இந்தியா வலைத்தளத்தில் தற்போது ஷாவ்மீ 14 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.79,999 க்கு பதிலாக ரூ.20,000 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது.

புதிய ஷாவ்மீ 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள்: ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அறிமுக சலுகைகளை பொறுத்தவரை ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் போது, வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.5,000 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் கிடைக்கும் மற்றும் ரூ. 5,999 மதிப்புள்ள இலவச ஷாவ்மீ கேர் சலுகைகளையும் பெறலாம். இதேபோல ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இலவச போட்டோகிராஃபி கிட் லெஜெண்ட் எடிஷன் மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் ரூ.10,000 உடனடி தள்ளுபடி சலுகையை பெறுவார்கள்.
யூஎஸ்பி டைப்-சி கேமரா ஹேண்டில், 2,000mAh பேட்டரி மற்றும் பிரிக்கக்கூடிய ஷட்டர் பட்டன் கொண்ட ஷாவ்மீ 15 அல்ட்ரா போட்டோகிராஃபி கிட் லெஜெண்ட் எடிஷனின் (Xiaomi 15 Ultra Photography Kit Legend Edition) உண்மையான விலை ரூ. 11,999 ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
முன்னரே குறிப்பிட்டபடி ஷாவ்மீ 15 சீரீஸ் ஸ்மார்ட்போனின் முன்பதிவு வருகிற மார்ச் 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. பின்னர் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். இதற்கிடையில் ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் ஏர்லி அக்சஸ் சேல் ஆனது மார்ச் 18 அன்று நடைபெறும். இது அமேசான் (Amazon), ஷாவ்மீ இந்தியா இ-ஸ்டோர் (Xiaomi India e-store) வழியாக சில்வர் க்ரோம் கலர் ஆப்ஷனில் வாங்க கிடைக்கும்.
ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.73-இன்ச் WQHD+ LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓ அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 (HyperOS 2.0)
- லைக்கா டியூன் செய்யப்பட்ட குவாட் ரியர் கேமரா யூனிட்
- 50-மெகாபிக்சல் ப்ரைமரி LYT-900 சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்)
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- OIS மற்றும் 3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX858 டெலிஃபோட்டோ கேமரா
- OIS மற்றும் 4.3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 200-மெகாபிக்சல் ISOCELL HP9 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார்
- 90W வயர்டு மற்றும் 80W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5410mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யூஎஸ்பி 3.2 டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.36-இன்ச் FHD+ (1200 x 2670 பிக்சல்ஸ்) LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓ அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 (HyperOS 2.0)
- லைக்கா டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்
- OIS ஆதரவுடன் 50-மெகாபிக்ஸ் ப்ரைமரி சென்சார்
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார்
- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5240mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யூஎஸ்பி 3.2 டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்


Click it and Unblock the Notifications








