Home
Mobile

போட்டி போட்டு வாங்க போறாங்க! மூன்று 50MP கேமரா! இப்படி ஒரு Camera Phoneக்கு தான் காத்து கிடந்தோம்! என்ன மாடல்?

"இப்படி ஒரு கேமரா போனுக்கு தான் இவ்ளோ நாள் காத்து கிடந்தோம்!" என்று வாடிக்கையாளர்களையும், மொபைல் போட்டோகிராஃபி பிரியர்களையும் கூறவைக்கும்படியான ஒரு ஸ்மார்ட்போன் இந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதென்ன மாடல்? எப்போது அறிமுகம்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

நாம் இங்கே பேசுவது ஷாவ்மீ 14 (Xiaomi 14) ஸ்மார்ட்போனை பற்றித்தான். சியோமியின் இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது ஷாவ்மீ 14 ப்ரோ (Xiaomi 14 Pro) ஸ்மார்ட்போனுடன் சேர்த்து, வருகிற அக்டோபர் 27 ஆம் தேதியன்று அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி ஒரு Camera Phoneக்கு தான் காத்து கிடந்தோம்! என்ன மாடல்?

அறிமுக நாள் மிகவும் நெருக்கமாக இருக்கும் நிலைப்பாட்டில், ஷாவ்மீ 14 ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களும், அதன் விலை நிர்ணயமும் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல்களை வைத்து பார்க்கும் போது, இதுவொரு அட்டகாசமான கேமரா போனதாகவும், ஒரு நல்ல ஆல்-ரவுண்டர் போனதாகவும் இருக்கும் என்பதை வெளிப்படையாக அறிய முடிகிறது

ஷாவ்மீ 14 டிஸ்பிளே: லீக்ஸ் தகவல்களின்படி, 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடனான 6.44-இன்ச் அளவிலான Huaxing C8 OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இந்த டிஸ்பிளே டால்பி விஷன், எச்டிஆர்10 பிளஸ், 2800 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், டிசிஐ-பீ கலர் கேமட் போன்றவைகளையும் கொண்டிருக்கும்.

ஷாவ்மீ 14 ப்ராசஸர்: இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Quallcomm Snapdragon 8 Gen 3 SoC) மூலம் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த சிப்செட் LPDDR5x RAM மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு இருக்கலாம். குவால்காம் நிறுவனத்தின் இந்த நெக்ஸ்ட் ஜெனரஷன் பிளாக்ஷிப் சிப்செட் இம் மாத இறுதியில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாவ்மீ 14 கேமரா: இது லைக்கா பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை பேக் செய்யலாம். இதில் ஓஐஎஸ்ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் OV50H மெயின் கேமரா + 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் + 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவைகளை கொண்டிருக்கும். செல்பீ கேமரா பற்றிய விவரங்கள் இல்லை.

ஷாவ்மீ 14 பேட்டரி: இது 90W வயர்டு சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றிற்கான ஆதரவுடன் 4600mAh பேட்டரியை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கியமான அம்சங்களை பொறுத்தவரை ஷாவ்மீ 14 ஸ்மார்ட்போனில் ஹீட் மேனேஜ்மென்ட்டிற்கான பெரிய விசி கூலிங் சிஸ்டமுடன் வரலாம்.

மிகவும் முக்கியமாக இந்த ஸ்மார்ட்போன் ஷாவ்மீ நிறுவனத்தின் புதிய ஓஎஸ் ஆன எம்ஐஓஎஸ் (MiOS) ஆப்ரேட்டிங் சிஸ்டமுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், டூயல் ப்ரெவென்ஸி ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி, ஐஆர் பிளாஸ்டர், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங் போன்றவைகளையும் கொண்டிருக்கலாம்.

ஷாவ்மீ 14 விலை: ஆன்லைன் வழியாக கிடைத்த லீக்ஸ் தகவல்களின்படி, ஷாவ்மீ 14 ஸ்மார்ட்போன் 4 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும். இந்திய ரூபாய் மதிப்பின்படி 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.ரூ.45,821 க்கும், 12ஜிபி + 512ஜிபி ரூ.ரூ.49,244 க்கும், 16ஜிபி + 512ஜிபி ரூ.52,681 க்கும், 16ஜிபி + 1டிபி ரூ.57,254 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

முன்னரே குறிப்பிட்டபடி ஷாவ்மீ 14 ஆனது ஷாவ்மீ 14 ப்ரோ மாடலும் அறிமுகமாகும். இவ்விரு போன்களும் இந்தியாவில் வாங்க கிடைக்குமா என்று கேட்டால் நிச்சயமாக வாங்க கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ 13 சீரிஸின் ப்ரோ மாடல் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதன் விலை ரூ.74,998 ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 14 Full Specifications Leaked Ahead Expected Launch Date October 27 What About Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X