Home
Mobile

அதிரவைக்கும் விலை.. Leica கேமரா.. நாளை மறுநாள் இந்தியாவில் அறிமுகமாகும் Xiaomi 5ஜி போன். எந்த மாடல்?

சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி 14 சிவி (Xiaomi 14 Civi) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் ஜூன் 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் 50எம்பி கேமரா, 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 512ஜிபி மெமரி மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு சியோமி 14 சிவி ஸ்மார்ட்போனின் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது சியோமி 14 சிவி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.45,000 விலையில் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு அறிமுக சலுகையாக ரூ.3000 வங்கி சலுகை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே ரூ.43,000 விலையில் இந்த அசத்தலான சியோமி ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மறுநாள் இந்தியாவில் அறிமுகமாகும் Xiaomi 5ஜி போன். எந்த மாடல்?

சியோமி 14 சிவி அம்சங்கள் (Xiaomi 14 Civi specifications): 50எம்பி பிரைமரி Leica Summilux லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ்+ 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + என்கிற ட்ரிப்ள ரியர் கேமரா அமைப்புடன் இந்த சியோமி வெளிவரும்.. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி + 32எம்பி என்கிற டூயல் கேமரா அமைப்பு உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

அதேபோல் 1.5கே அமோலெட் டிஸ்பிளே (1.5K AMOLED display) உடன் இந்த சியோமி 14 சிவி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), எச்டிஆர் 10 பிளஸ்(HDR10+), டால்பி விஷன் (Dolby Vision), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Gorilla Glass Victus 2) உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

தரமான ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட் உடன் சியோமி 14 சிவி அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு அனைத்து ஆப்ஸ்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

குறிப்பாக சியோமி 14 சிவி போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) சார்ந்த சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) மூலம் இயங்குகிறது.ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். டால்பி அட்மாஸ் (Dolby ATMOS) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (stereo speakers) ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

சியோமி 14 சிவி போன் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மறுநாள் இந்தியாவில் அறிமுகமாகும் Xiaomi 5ஜி போன். எந்த மாடல்?

இந்த சியோமி போன் 4700எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (667W fast charging) வசதியும் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), யுஎஸ்பி டைப்-சி போர்ட், 5ஜி ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

சியோமி 14 சிவி போன் ஆனது குரூஸ் ப்ளூ டூயல்-ஸ்லைஸ் எடிஷன் ( Cruise Blue Dual-Slice Edition), மாட்சா க்ரீன் நானோ-டெக் வேகன் லெதர் எடிஷன் (Matcha Green Nano-Tech Vegan Leather Edition) மற்றும் ஷேடோ பிளாக் கிளாசிக் மேட் எடிஷன் (Shadow Black Classic Matte Edition)போன்ற மூன்று வேரியண்ட்களில்விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Xiaomi 14 CV price released ahead of India launch: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X