இந்தியாவுக்கு வரும் கேமரா அசுரன்.. 67W சார்ஜிங்.. 512GB மெமரி.. Leica கேமரா.. எந்த போன்? என்ன விலை?
சியோமி (Xiaomi) நிறுவனம் இந்தியாவில் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போனை இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் ஜூன் 12-ம் தேதி இந்தியாவில் சியோமி 14 சிவி (Xiaomi 14 Civi) போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதுவும் மற்ற போன்களில் உள்ள கேமராக்களை போன்று இல்லாமல் தனித்துவமான Leica கேமரா வசதியுடன் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதேபோல் சியோமி 14 சிவி ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தான் விற்பனைக்கு வரும். மேலும் பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சியோமி 14 சிவி அம்சங்கள் (Xiaomi 14 Civi specifications): 1.5கே அமோலெட் டிஸ்பிளே (1.5K AMOLED display) உடன் இந்த சியோமி 14 சிவி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), எச்டிஆர் 10 பிளஸ்(HDR10+), டால்பி விஷன் (Dolby Vision), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Gorilla Glass Victus 2) உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.
50எம்பி பிரைமரி Leica Summilux லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ்+ 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + என்கிற ட்ரிப்ள ரியர் கேமரா செட்டப் உடன் இந்த சியோமி போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி + 32எம்பி என்கிற டூயல் கேமரா அமைப்பு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட் வசதியுடன் இந்த சியோமி போன் இந்தியாவில் அறிமுகமாகும். குறிப்பாக இந்த தரமான சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு அனைத்து ஆப்ஸ்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
சியோமி 14 சிவி போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) சார்ந்த சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) மூலம் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். டால்பி அட்மாஸ் (Dolby ATMOS) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (stereo speakers) ஆதரவு இந்த போனில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறமுடியும்.
குறிப்பாக 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சியோமி 14 சிவி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

4700எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (67W fast charging)வசதியும் கொண்டுள்ளது சியோமி போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), யுஎஸ்பி டைப்-சி போர்ட், 5ஜி ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.
குரூஸ் ப்ளூ டூயல்-ஸ்லைஸ் எடிஷன் ( Cruise Blue Dual-Slice Edition), மாட்சா க்ரீன் நானோ-டெக் வேகன் லெதர் எடிஷன் (Matcha Green Nano-Tech Vegan Leather Edition) மற்றும் ஷேடோ பிளாக் கிளாசிக் மேட் எடிஷன் (Shadow Black Classic Matte Edition)போன்ற மூன்று வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் ரூ.35,000-க்கு கீழ் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications