சீனாக்காரன் சிதற விடுறானே.. அறிமுகமான உடனே ரூ.6000 ஆபர் விலையில் விற்பனை.. Xiaomi-யின் Panda போன்!
வித்தியாசமான விஷயங்களை விரும்பும் இந்தியர்களை குறிவைத்து சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஷாவ்மீ, அதன் புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அது ஷாவ்மீ 14 சிவி லிமிடெட் எடிஷன் (Xiaomi 14 Civi Limited Edition) ஸ்மார்ட்போனாகும். இது கடந்த ஜூன் 12 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமான ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டின் ஸ்பெஷல் எடிஷன் ஆகும். இது டூயல்-டோன் பாண்டா டிசைனுடன் (Dual-Tone Panda Design) வருகிறது. பிளாக் மிரர் கிளாஸ் மற்றும் வேகன் லெதர் ஆகியவற்றுடன் இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் முதல் மின்சார வாகனமான ஷாவ்மீ எஸ்யு7 (Xiaomi SU7) போன்ற தோற்றத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமான வேகத்தில் (ரூ.6000 வரையிலான ஆபர் விலையில்) விற்பனையையும் தொடங்கியுள்ளது. ஷாவ்மீ 14 சிவி லிமிடெட் எடிஷனின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்?

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் ஷாவ்மீ 14 சிவி லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் ரூ.48,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சிங்கிள் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே வாங்க கிடைக்கும். அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, ஐசிஐசிஐ பேங்க் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.3,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் ரூ.3000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும். இப்படியாக இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலையில் ரூ.6000 வரை குறைக்க முடியும்.
ஷாவ்மீ 14 சிவி லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது அக்வா ப்ளூ, ஹாட் பிங்க் மற்றும் பாண்டா ஒயிட் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இது ஷாவ்மீ இந்தியா வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கிறது.
என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? அம்சங்கள் அடிப்படையில் ஷாவ்மீ 14 சிவி லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனிற்கும், ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டிற்கும் வித்தியாசங்கள் எதுவும் இல்லை. இது பேஸிக் ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனில் உள்ள அதே அம்சங்களை தான் கொண்டுள்ளது. இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) மற்றும் 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (3000 nits Peak Brightness) உடனான 6.55-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை (OLED Display) கொண்டுள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8s Gen 3 SoC) மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, பேக் பேனலில் 50 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா (50MP Triple Rear Camera Setup) செட்டப்பையும், முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரையும் கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4,700mAh பேட்டரியை பேக் செய்யும்.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஷாவ்மீ 14 சிவி லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் கஸ்டம் ஸ்கின், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், இன்ப்ராரெட் சென்சார், ஹை-ரெஸ் ஆடியோ, டால்பி அட்மாஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், ப்ளூடூத் 5.4, என்எப்சி மற்றும் டூயல் சிம் ஆதரவு ஆகியவைகளை கொண்டுள்ளது.
ஷாவ்மீ 14 சிவி லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனுடன் சேர்த்து ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Redmi Pad Pro 5G) மற்றும் ரெட்மி பேட் எஸ்இ 4ஜி (Redmi Pad SE 4G) என்கிற 2 புதிய டேப்லெட் மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ப்ரோ மாடலின் விலை ரூ.21,999 முதல் தொடங்குகிறது மற்றும் ஆகஸ்ட் 2 முதல் வாங்க கிடைக்கும். எஸ்இ மாடலின் விலை ரூ.10,999 முதல் தொடங்குகிறது மற்றும் இது ஆகஸ்ட் 8 முதல் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








