ப்பா.. Panda டிசைனில்.. க்யூட் ஆன 3 கலர்களில்.. புதிய Xiaomi ஸ்மார்ட்போன்.. என்ன மாடல்? என்ன விலை?
என்னடா இது ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சாரியமாக இருக்கிறது என்று நினைக்கும்படியாக.. சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் இந்தியர்களுக்கான பேக்-டூ-பேக் சர்ப்ரைஸ்களை அறிவித்துள்ளது. ஒன்று - ஏற்கனவே அறிமுகமாகி விட்ட ஷாவ்மீ 14 சிவி (Xiaomi 14 Civi) ஸ்மார்ட்போன். இது மிகவும் ஸ்பெஷல் ஆன ஸ்மார்ட்போனாகும். ஏனென்றால் ஷாவ்மீ நிறுவனமானது அதன் சிவி சீரீஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தது. ஆனால் ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தின் வழியாக இந்த பாரம்பரியம் உடைக்கப்பட்டது.
நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகமானது. தற்போது இரண்டாவது சர்ப்ரைஸ் ஆக.. இதே ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனின் லிமிடெட் எடிஷன் (Xiaomi 14 Civi Limited Edition) ஆனது ஜூலை 29 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஷாவ்மீ நிறுவனம இந்த லிமிடெட் எடிஷனை "பாண்டா டிசைன்" (Panda Design) என்று குறிப்பிடுகிறது.

பாண்டா டிசைன் உடன் வரும் ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போன் ஆனது புதிய மிரர் கிளாஸ் மற்றும் வேகன் லெதர் பினிஷில் (Mirror Glass and Vegan Leather Finish), பிங்க், மோனோக்ரோம் மற்றும் ப்ளூ வெர்ஷன்களில் (Pink, Monochrome and Blue Versions) வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இது பல வகையான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருமா அல்லது டாப் எண்ட் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷனில் மட்டுமே வெளியாகுமா என்பதில் தெளிவில்லை.
மேலோட்டமான வடிவமைப்பை தவிர, இந்த லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது பேஸிக் ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனில் உள்ள அதே அம்சங்களை தான் கொண்டிருக்கும். முன்னரே குறிப்பிட்டபடி, ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால்.. இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது என்பது குறித்து எந்த குழப்பமும் இல்லை.
பாண்டா டிசைனுடன் வரும் ஷாவ்மீ 14 சிவி லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (3000 nits Peak Brightness) உச்ச பிரகாசத்துடன் 6.55-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை (OLED Display) கொண்டிருக்கும். இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8s Gen 3 SoC) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, பேக் பேனலில் 50 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா (50MP Triple Rear Camera Setup) செட்டப்பையும், முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரையும் கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4,700mAh பேட்டரியை பேக் செய்யும்.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் தகஸ்டம் ஸ்கின், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், இன்ப்ராரெட் சென்சார், ஹை-ரெஸ் ஆடியோ, டால்பி அட்மாஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், ப்ளூடூத் 5.4, என்எப்சி மற்றும் டூயல் சிம் ஆதரவு ஆகியவைகளை கொண்டுள்ளது.
என்ன விலைக்கு வரும்? பாண்டா டிசைன் உடன் வரும் ஷாவ்மீ 14 சிவி லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.45,000 - ரூ.50,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஸ்பெஷல் எடிஷன் என்பதால் விலை சிறிதேனும் அதிகமாக இருக்கக்கூடும்.


Click it and Unblock the Notifications








