Home
Mobile

அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. 67W சார்ஜிங்.. Leica கேமரா.. இந்தியாவுக்கு வரும் சியோமி போன்..

சியோமி நிறுவனம் தனது சியோமி 14 சிவி போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, Leica கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் இப்போது இந்த போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி 14 சிவி அம்சங்கள் (Xiaomi 14 Civi specifications): 1.5கே அமோலெட் டிஸ்பிளே (1.5K AMOLED display) வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி 14 சிவி ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

67W சார்ஜிங்.. Leica கேமரா.. இந்தியாவுக்கு வரும் சியோமி போன்..

குறிப்பாக சியோமி 14 சிவி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும். இந்த சிப்செட மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி 14 சிவி ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் மற்றும் கேமரா வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

67W சார்ஜிங்.. Leica கேமரா.. இந்தியாவுக்கு வரும் சியோமி போன்..

ஆண்ட்ராய்டு 14 (Android 14) சார்ந்த சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) மூலம் இந்த சியோமி போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தரமான ஆடியோ அம்சத்துடன் சியோமி 14 சிவி போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

50எம்பி பிரைமரி Leica Summilux லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிப்ள ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சியோமி 14 சிவி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன் இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

4700எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் சியோமி 14 சிவி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (67W fast charging) வசதியும் உள்ளது. எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

67W சார்ஜிங்.. Leica கேமரா.. இந்தியாவுக்கு வரும் சியோமி போன்..

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இந்த சியோமி போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி 14 சிவி ஸ்மார்ட்போன். குரூஸ் ப்ளூ டூயல்-ஸ்லைஸ் எடிஷன் ( Cruise Blue Dual-Slice Edition), மாட்சா க்ரீன் நானோ-டெக் வேகன் லெதர் எடிஷன் (Matcha Green Nano-Tech Vegan Leather Edition) மற்றும் ஷேடோ பிளாக் கிளாசிக் மேட் எடிஷன் (Shadow Black Classic Matte Edition) ஆகி மூன்று வேரியன்களில் இந்த போனை வாங்க முடியும்.

எப்போது அறிமுகம்: சியோமி 14 சிவி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ஜூன் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போன் பிளிப்கார்ட், MI.காம் தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.34,390 விலையில் இந்த போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 14 Civi India Launch Date Revealed: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X