யோசிக்காம ஆர்டர் போட்ருங்க.. 50MP கேமரா.. 67W சார்ஜிங்.. இன்று விற்பனைக்கு வரும் Xiaomi போன்.. எந்த மாடல்?
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி 14 சிவி (Xiaomi 14 CIVI) போன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்களில் வாங்க முடியும். இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
குறிப்பாக 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட சியோமி 14 சிவி போனின் விலை ரூ.42,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.47,999-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் தள்ளுபடியும் உள்ளது.

சியோமி 14 சிவி அம்சங்கள் (Xiaomi 14 Civi specifications): தரமான ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட் உடன் சியோமி 14 சிவி வெளிவந்துள்ளது. அதேபோல் கேமிங் பயனர்களை கவரும் வகையில் இந்த போனுக்கு அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU)கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
அதேபோல Hyper OIS சார்ந்த 50எம்பி பிரைமரி Leica Summilux லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ்+ 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த சியோமி போன். மேலும் 32எம்பி + 32எம்பி என்கிற டூயல் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் இந்த போனின் உதவியுடன் 4கே வீடியோக்களை எடுக்க முடியும்
சியோமி 14 சிவி ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் 1.5 கே சி8 12-பிட் ஒஎல்இடி ( 1.5K C8 12-bit OLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 3000 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Vision), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Gorilla Glass Victus 2) உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
குறிப்பாக 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். சியோமி 14 சிவி போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) சார்ந்த சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) மூலம் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டால்பி அட்மாஸ் (Dolby ATMOS) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (stereo speakers), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளன.

இந்த சியோமி போன் 4700எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (67W fast charging) உடன் வெளிவந்துள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வை-பை 6 802.11 பிஇ (Wi-Fi 6 802.11 be), புளூடூத் 5.1 (Bluetooth 5.4), யுஎஸ்பி டைப்-சி 3.2 ஜென் 1 (USB Type-C 3.2 Gen 1), என்எப்சி (NFC) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
குரூஸ் ப்ளூ டூயல்-ஸ்லைஸ் எடிஷன் ( Cruise Blue Dual-Slice Edition), மாட்சா க்ரீன் நானோ-டெக் வேகன் லெதர் எடிஷன் (Matcha Green Nano-Tech Vegan Leather Edition) மற்றும் ஷேடோ பிளாக் கிளாசிக் மேட் எடிஷன் (Shadow Black Classic Matte Edition) போன்ற மூன்று வேரியண்ட்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications