iPhone-லாம் இங்குட்டு போ.. OnePlus-லாம் அங்குட்டு போ.. அக்.26ல் அறிமுகமாகும் 2 வெயிட்டான போன்கள்!
டிசைன், டிஸ்பிளே, கேமரா, பேட்டரி என கிட்டத்தட்ட அனைத்து டிப்பார்ட்மென்ட்களிலும் பிரீமியம் அம்சங்களுடன்.. தற்போது வாங்க கிடைக்கும் பெரும்பாலான பிளாக்ஷிப் போன்களை ஓரங்கட்டும் முனைப்பின்கீழ் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி அன்று 2 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
அதென்ன மாடல்கள்? நாம் இங்கே பேசுவது ஷாவ்மீ 14 சீரீஸ் (Xiaomi 14 Series) ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். இந்த சீரிஸின் ஷாவ்மீ 14 (Xiaomi 14) மற்றும் ஷாவ்மீ 14 ப்ரோ (Xiaomi 14 Pro) என்கிற 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன.

முன்னரே குறிப்பிட்டபடி, இவ்விரு ஸ்மார்ட்போன்களும் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்படும் என்பதை சீன மொபைல் நிறுவனமான ஷாவ்மீ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. இவ்விரு ஸ்மார்ட்போன்களும் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:
ஷாவ்மீ 14 மற்றும் ஷாவ்மீ 14 ப்ரோவில் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? முதல் மற்றும் முக்கிய அம்சமாக - ஷாவ்மீ 14 சீரீஸின் கீழ் வரும் 2 ஸ்மார்ட்போன்களுமே ஷாவ்மீயின் புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டம் (New Operating System) ஆன ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) உடன் இயங்கும். இது பழைய எம்ஐயுஐ ஓஎஸ்-க்கான (MIUI OS) மாற்றாக இருக்கும்!

புதிய ஓஎஸ்-க்கு அடுத்தபடியாக ஷாவ்மீ 14 சீரீஸின் கவனிக்கப்பட வேண்டிய 2 முக்கியமான விஷயங்கள் / அம்சங்கள் என்றால்.. அது கேமரா யூனிட் (Camera Unit) மற்றும் இதன் ப்ராசஸர் (Processor) ஆகத்தான் இருங்க வேண்டும். ஷாவ்மீ 14 சீரிஸின் 2 ஸ்மார்ட்போங்களுமே லைக்கா-டியூன்டு ரியர் கேமரா யூனிட்களை (Leica-tuned Rear Camera Units) பேக் செய்யும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கூடவே ஷாவ்மீ 14 மற்றும் ஷாவ்மீ 14 ப்ரோ ஆகிய இரண்டுமே ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம், இந்த சிப்செட், இந்த வாரம் நடக்கவுள்ள ஸ்னாப்டிராகன் உச்சிமாநாட்டின் (Snapdragon Summit) போது குவால்காமின் நெக்ஸ்ட் ஜெனெரஷன் பிளாக்ஷிப் சிப்செட் (Next Generation Flagship Chipset) ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஷாவ்மீ 14 ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.44-இன்ச் ஹாஸிங் சி8 ஓஎல்இடி டிஸ்பிளேவை (6.44-inch Huaxing C8 OLED display) கொண்டிருக்கலாம். மறுகையில் உள்ள ஷாவ்மீ 14 ப்ரோ மாடலானது 2கே ரெசல்யூஷன் தெளிவுத்திறன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6-இன்ச் பிளாட் அமோஎல்இடி 2.5டி டிஸ்பிளேவை (6.6-inch flat AMOLED 2.5D display) கொண்டிருக்கலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, சியோமி 14 சீரிஸின் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple rear camera setup) பேக் செய்யும். அதில் ஓஐஎஸ் (OIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுக்கான (Optical image stabilization) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் ஓவி50எச் மெயின் கேமரா ( 50-megapixel OV50H main camera) இடம்பெறலாம்.

சார்ஜிங் ஸ்பீடை பொறுத்தவரை ஷாவ்மீ 14 ஸ்மார்ட்போனில் 90வாட் வயர்டு சார்ஜிங் (90W Wired Charging), 50வாட் வயர்லெஸ் சார்ஜிங் (50W Wireless Charging) மற்றும் 10வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் (10W Reverse Wireless Charging) போன்றவைகளை வழங்கும் 4600mAh பேட்டரி பேக் செய்யப்படலாம். மறுகையில் உள்ள ஷாவ்மீ 14 ப்ரோ மாடலில் 120வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (120W Wired Fast Charging) மற்றும் 50வாட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 4,860mAh பேட்டரி இடம்பெறலாம்.
சீன அறிமுகத்தை தொடர்ந்து இவைகள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம். எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ஷாவ்மீ 14 ஆனது ரூ,54,999 க்கும், ஷாவ்மீ 14 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.64,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். உண்மையான விலை விவரங்கள் அக்.26 நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








