Home
Mobile

Pro மாடல்ல இது வேற ரகம்.. 1TB ஸ்டரோஜ்.. 5000mAh பேட்டரி.. 120W சார்ஜிங் உடன் புது Xiaomi போன்.. என்ன மாடல்?

சியோமி நிறுவனம் முன்புபோல் மாதம் ஐந்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில்லை. அதாவது இந்நிறுவனம் அவ்வப்போது ஒரு தரமான ஸ்மார்ட்போனை மட்டும் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக சிறந்த வடிவமைப்பு, தரமான மென்பொருள் மற்றும் தனித்துவமான கேமரா வசதி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் சியோமி நிறுவனம் போன்களை அறிமுகம் செய்கிறது.

இந்நிலையில் சியோமி நிறுவனம் விரைவில் சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் உலக சந்தை மற்றும் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த சியோமி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

20W சார்ஜிங் உடன் புது Xiaomi போன்.. என்ன மாடல்?

FCC சான்றிதழ் தளத்தில் வெளியான தகவலின்படி, இந்த சியோமி 13டி ப்ரோ (Xiaomi 13T Pro) ஸ்மார்ட்போன் ஆனது 23078PND5G என்ற மாடல் நம்பரை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் (MediaTek Dimensity 9200+) சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும்.

அதேபோல் டைமன்சிட்டி 9200 பிளஸ் சிப்செட் ஆனது சிறந்த செயல்திறன் வழங்கும். பின்பு MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு இயங்குதள வசதியுடன் இந்த புத்தம் புதிய சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக 12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி/1டிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் அறிமுகமாகும் இந்த சியோமி போன்.

50எம்பி Sony IMX989 பிரைமரி கேமரா + 50எம்பி Leica டெலிபோட்டோ லென்ஸ் + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு இந்த சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும். குறிப்பாக எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போனின் மென்பொருள் மற்றும் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

6.67-இன்ச் கிரிஸ்டல் ரெஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் டிஸ்பிளே ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி போன். எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

20W சார்ஜிங் உடன் புது Xiaomi போன்.. என்ன மாடல்?

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு டால்பி ஆடியோ வசதி, 5ஜி, 4ஜி, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 13T Pro with 5000mAh battery, 1120W fast charging support to launch soon: check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X