Home
Mobile

புதுசா போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! வருது தரமான Xiaomi போன்.!

சியோமி நிறுவனம் தற்போது விலை உயர்ந்த போன்களை அறிமுகம் செய்வதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறது. ஆனால் தற்போது இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சியோமி நிறுவனம் விரைவில் ஒரு அசத்தலான போனை அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது சியோமி நிறுவனம் சியோமி 13டி ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை தான் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு இறுதியில் சியோமி 13டி ப்ரோ போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி இன்னும் சில வாரங்களில் சர்வதேசச் சந்தையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுசா போன் வாங்க போறீங்களா? வெயிட் பண்ணுங்க! வருது தரமான Xiaomi போன்!

அதேபோல் IMDA சான்றிதழ் இணையதளத்தில் இந்த சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போனின் மாடல் எண் மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாக உள்ளன. அதாவது சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போனின் மாடல் எண் 23078PND5G ஆகும். பின்பு இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் CrystalRes AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து. குறிப்பாக இதன் டிஸ்பிளே தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.

குறிப்பாக சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் போன்ற பயன்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாகப் பயன்படும். குறிப்பாக MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 ஆண்ட்ராய்டு இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. இதில் 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா வசதியும் அடக்கம். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதயைக் கொண்டுள்ளது இந்த சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 13T Pro Phone to Launch in International Market Soon: Specifications Revealed : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X