Home
Mobile

சீனாக்காரன் செஞ்சி விட்டான்.. OnePlus சேப்டர் க்ளோஸ்.. 5000mAh பேட்டரி, 120W சார்ஜிங், OIS கேமரா.. என்ன மாடல்?

வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதியன்று ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் பெரும்பாலான மாடல்களின் விற்பனையில் ஒரு பெரிய சிக்கல் ஏற்படலாம். ஏனென்றால் குறிப்பிட்ட நாளில் சீன மொபைல் தயாரிப்பாளரான ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்தின் 2 புதிய ஸ்மார்ட்போன்கள் உலகளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது!

நாம் இங்கே பேசுவது ஷாவ்மீ 13டி மற்றும் ஷாவ்மீ 13டி ப்ரோவை பற்றித்தான். இவ்விரு போன்களின் உலகளாவிய வெளியீடு செப்.26 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்நிகழ்வு இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான எம்ஐ.காமில் (mi.com) நேரடியாக ஒளிபரப்பப்படும்.

சீனாக்காரன் செஞ்சி விட்டான்.. OnePlus சேப்டர் க்ளோஸ்!

ஷாவ்மீ 13டி (Xiaomi 13T) மற்றும் ஷாவ்மீ 13டி ப்ரோ (Xiaomi 13T Pro) ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இவ்விரு ஸ்மார்ட்போன்களும் என்னென்ன அம்சங்களை பேக் செய்கின்றன? இதெப்படி ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை பாதிக்கும்? இதோ விவரங்கள்:

ஷாவ்மீ 13டி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 6.67-இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவை (1.5K AMOLED Display) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) மற்றும் 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (2600 Nits Peak Brightness) போன்றவைகளையும் கொண்டிருக்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 8200 அல்ட்ரா 4என்எம் சிப்செட் (Dimensity 8200 Ultra 4nm Chipset) மூலம் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது ஓஐஎஸ் (OIS) உடனான 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) கொண்டிருக்கலாம். முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமராவையும் கொண்டிருக்கக்கூடும்.

மேலும் ஷாவ்மீ 13டி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார் (Infrared sensor) ஆகியவற்றையும் கொண்டிருக்கலாம். பேட்டரியை பொறுத்தவரை, இது 67W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி யூனிட்டை பேக் செய்யலாம்.

ஷாவ்மீ 13டி ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ப்ரோ வேரியண்ட் ஆனது வெண்ணிலா வேரியண்ட்டில் உள்ள அதே டிஸ்பிளேவை கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் இது டைமன்சிட்டி 9200 பிளஸ் 4என்எம் சிப்செட் (Dimensity 9200+ 4nm Chipset) மூலம் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை இதில் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்707 (50MP Sony IMX707) மெயின் கேமராவுடன் வரலாம். முன்பக்கத்தில் 20எம்பி சோனி ஐஎம்எக்ஸ்596 (20MP Sony IMX596) சென்சார் இடம்பெறலாம். இது பெரும்பாலும் வெண்ணிலா மாடலில் உள்ளதை போலவே 5000mAh பேட்டரியுடன் வரக்கூடும். இருப்பினும், இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாவ்மீ 13டி சீரீஸ் விலை நிர்ணயம்: ஃபோன்அரேனாவின் சமீபத்திய அறிக்கையின்படி, ஷாவ்மீ 13டி ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனில் மட்டுமே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 690 அமெரிக்க டாலர்க்காக இருக்கும்; அதாவது இந்திய ருபாய் மதிப்பின்படி சுமார் ரூ.57,400 ஆகும்.

மறுகையில் உள்ள ஷாவ்மீ 13டி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு வெவ்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்: 12ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ். இவற்றின் விலை நிர்ணயம் முறையே $878 (சுமார் ரூ.73,000) மற்றும் $1072 (சுமார் ரூ.89,200) க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரூ.57,400 என்கிற ஷாவ்மீ 13டி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயமானது ரூ.60,000 க்குள் வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை கடுமையாக பாதிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இன்னும் சொல்லப்போனால் இது வரப்போகும் ஒன்பில்ஸ் 13 மாடளுக்கு கூட போட்டியாக இருக்கலாம். ஏனென்றால் ஒன்பிளஸ் 13 ரூ.60,000-ஐ சுற்றிய விலை நிர்ணயத்தை பெறுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi 13T and Xiaomi 13T Pro Global Launch on September 26 Expected Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X