Home
Mobile

கேட்டாலே தலைச்சுற்றும் விலை.. 1டிபி ஸ்டோரேஜ், 120W ஃபாஸ்ட் சார்ஜிங்.. வருகிறது Xiaomi போன்.. எந்த மாடல்?

வரும் செப்டம்பர் 1-ம் தேதி உலக சந்தையில் சியோமி 13டி மற்றும் சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சீனாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே60 அல்ட்ரா போன்கள் தான் உலக சந்தையில் சியோமி 13டி மற்றும் சியோமி 13டி ப்ரோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த சியோமி 13டி மற்றும் சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக இந்த சியோமி 13 சீரிஸ் போன்கள் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த புதிய போன்களின் விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

1டிபி ஸ்டோரேஜ், 120W ஃபாஸ்ட் சார்ஜிங்.. வருகிறது  Xiaomi போன்..

சியோமி 13டி அம்சங்கள் (Xiaomi 13T Specifications): 6.67-இன்ச் AMOLED CrystalRes 1.5கே டிஸ்பிளே வசதியுடன் இந்த சியோமி 13டி போன் வெளிவரும். பின்பு2712 x 1220 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்ட்ரா(MediaTek Dimensity 9200 Ultra) சிப்செட் மற்றும் மாலி-ஜி610 எம்சி6 ஜிபியு (Mali-G610 MC6 GPU) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய சியோமி 13டி போன். மேலும் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 மூலம் இந்த சியோமி 13டி போன் இயங்குகிறது.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 707 சென்சார் (Sony IMX 707 sensor) + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சியோமி 13டி போன். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும்.

120 வாட்ஸ் பாஸட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி 13டி போன். அதேபோல் 8ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஐபி68 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த சியோமி 13டி போன் வெளிவரும். குறிப்பாக கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த சியோமி 13டி போன் அறிமுகமாகும்.

சியோமி 13டி ப்ரோ அம்சங்கள் (Xiaomi 13T Pro Specifications): 6.67-இன்ச் AMOLED CrystalRes 1.5கே டிஸ்பிளே வதியுடன் இந்த சியோமி 13டி ப்ரோ போன் அறிமுகமாகும். குறிப்பாக 2712 x 1220 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2600 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.

மீடியாடெக் டைமன்சிட்டி 9200 அல்ட்ரா (MediaTek Dimensity 9200 Ultra) சிப்செட் வசதியுடன் இந்த சியோமி 13டி ப்ரோ போன் அறிமுகமாகும். மேலும் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 707 சென்சார்(50MP Sony IMX 707 sensor) + 50எம்பி ஆம்னிவிஷன் OV50D டெலிபோட்டோ சென்சார் + 13எம்பி ஆம்னிவிஷன் அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சியோமி 13டி ப்ரோ போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும்.

1டிபி ஸ்டோரேஜ், 120W ஃபாஸ்ட் சார்ஜிங்.. வருகிறது  Xiaomi போன்..

120 வாட்ஸ் பாஸட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது சியோமி 13டி ப்ரோ போன். பின்பு ஐபி68 ரேட்டிங், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி போன். அதேபோல் கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த சியோமி 13டி ப்ரோ போன் அறிமுகமாகும்.

விலை: ஆன்லைனில் வெளியான தகவலின்படி, 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சியோமி 13டி போனின் விலை £549 (இந்திய மதிப்பில் ரூ.58,150). பின்பு இதன் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை £699 (இந்திய மதிப்பில் ரூ.74,100). அதேபோல் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட சியோமி போனின் விலை €999 (இந்திய மதிப்பில் ரூ.90,500). குறிப்பாக இந்த இரண்டு போன்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo courtesy: mysmartprice

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 13T and 13T Pro smartphones will be launched on September 1: check specifications Price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X