Home
Mobile

மார்கெட் அதிரும் மாஸ்டர் பீஸ்.. SONY சென்சார்.. LEICA ஆப்டிக்ஸ்.. 50MP டெலிபோட்டோ.. 12GB ரேம்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த கேமரா போன்களையும் அதிரவிடும் வகையில், 50எம்பி சோனி கேமரா, 50எம்பி டெலிபோட்டோ கேமரா, 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல், 12ஜிபி ரேம், 67W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்றவற்றுடன் சியோமி 13டி (Xiaomi 13T) மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி 13டி அம்சங்கள் (Xiaomi 13T Specifications): இந்த சியோமி மாடலில் 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.

SONY சென்சார்.. LEICA ஆப்டிக்ஸ்.. 50MP டெலிபோட்டோ.. எந்த மாடல்?

அதோடு 2880Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் உள்ளது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சியோமி 13டி போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்ட்ரா 4என்எம் சிப்செட் (Octa Core MediaTek Dimensity 8200 Ultra 4nm ) வருகிறது. அதோடு மாலி - ஜி610 எம்சி6 ஜிபியு (Mali-G610 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இது கேமிங் பிரியர்களுக்கு பிரீமியம் ஃபீல் கொடுக்கக்கூடியது.

இந்த போன் ஆண்ட்ராய்டு 13 (Android 13) மற்றும் எம்ஐயுஐ 14 (MIUI 14) ஓஸ் கொண்டுள்ளது. இதில் 8 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. டூயல் நனோ சிம் (Dual Nano SIM) சிலாட் வருகிறது. எஸ்டி கார்டு சிலாட் கிடையாது.

இந்த போனில் பிரம்மாண்டமான டிரிபிள் பேக் கேமரா சிஸ்டம் வருகிறது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்707 (Sony IMX707) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு ஓம்னிவிஷன் ஓவி13பி10 (Omnivision OV13B10) சென்சார் கொண்ட 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் ஓம்னிவிஷன் ஓவி50டி (Omnivision OV50D) சென்சார் கொண்ட 50 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.

இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமராவாகும். இதில், லெய்கா ஆப்டிக்ஸ் (Leica Optics), 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. அதேபோல சோனி ஐஎம்எக்ஸ்596 (Sony IMX596) சென்சார் கொண்ட 20 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் இன்பிராரெட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சியோமி போனில் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. அதோடு டைப்-சி ஆடியோ, ஹை-ரெஸ் ஆடியோ, டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்டுள்ளது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் கிரீன் (Green), பிளாக் (Black), வேகன் லெதர் ப்ளூ (Vegan Leather Blue) ஆகிய மூன்று கலர்கள் இருக்கிறது. இந்த போன் குளோபல் வேரியண்ட்டாக ஜெர்மனியில் நேற்று (செப்டம்பர் 27) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கும் கிடைக்கிறது. இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் 8 ஜிபி மாடலின் விலை ரூ.57,215ஆகவும், 12ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.70,440 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனோடு சியோமி 13டி ப்ரோ (Xiaomi 13T Pro) மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் ஆக்டா கோர் டைமன்சிட்டி 9200 பிளஸ் 4என்எம் சிப் வருகிறது. 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மாடல் கிடைக்கிறது. மற்ற அம்சங்கள் ஒரே மாதிரி இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 13T 12GB RAM, 50MP Camera, Dimensity 8200 Ultra Leica Optics on Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X