DSLR கேமராவுக்கு வேலை இருக்காது போலயே.. தரமான கேமரா வசதியுடன் அறிமுகமான Xiaomi 5ஜி போன்.!
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த போன் ஏற்கனவே சீனா மற்றும் ஹாங்காங் போன்ற பிற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்.
இந்த சியோமி 13 அல்ட்ரா போன் சூடாவதைத் தடுக்க இதில் VC liquid கூலிங் ஏரியா உள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது கேமிங் வசதிக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த போனில் உள்ளது. இப்போது சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6.73-இன்ச் 2கே AMOLED LTPO டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 3200 x 1440 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ், 2600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் பல சிறப்பான டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த புதிய சியோமி 13 அல்ட்ரா போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் அட்ரினோ ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக வீடியோ எடிட்டிங், கேமிங் போன்ற பல பயன்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாகப் பயன்படும்.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புத்தம் புதிய சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி சூப்பர் டெலி போட்டோ லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 90 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங், 50 வாட்ஸ் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதிகளை கொண்டுள்ளது இந்த சியோமி போன். மேலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்,ஹை-ரெஸ் ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.
நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 சான்றிதழ் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய சியோமி போன். மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை €1,499.99 (இந்திய மதிப்பில் ரூ.1,33,200).


Click it and Unblock the Notifications








