அடேங்கப்பா சூப்பர் சிப்செட் வசதி., விரைவில் அறிமுகமாகும் புதிய சியோமி ஸ்மார்ட்போன்.!
சியோமி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன், டிவி உட்பட பல சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் சாதனங்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சியோமி நிறுவனம் புதிய சியோமி 13 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

சியோமி 13
வரும் மாதங்களில் இந்த சியோமி 13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த 13 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
வெளிவந்த தகவலின்படி, சியோமி 13 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியுடன் வெளிவரும். இந்த சிப்செட் வசதி சிறந்த செயல் திறன் கொண்டது. குறிப்பாக கேமிங் ஆப், எடிட்டிங் ஆப் போன்றவைக்கு மிக அருமையாக பயன்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

அதேபோல் இந்த சியோமி 13 ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் இந்த புதிய சியோமி 13 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சியோமி 13 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்
இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
சியோமி 12 ப்ரோ

சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.73-இன்ச் 2கே AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 3200 x 1440 பிக்சல் தீர்மானம், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1500 நிட்ஸ் ப்ரைட்னஸ், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்டபல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும் என்றே கூறலாம். அதேபோல் அட்ரினோ ஜிபி ஆதரவு மற்றும் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி Sony IMX707 பிரைமரி சென்சார் + 50எம்பி Samsung JN1 அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

குறிப்பாக சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 120 வாட் பாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு, 10 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன். 5ஜி,4ஜி எல்டிஇ, வைஃபை 6இ, என்எப்சி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன். ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது
இந்த சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன்.
குறிப்பாக சியோமி 12 ப்ரோ சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.62,999-ஆக உள்ளது. மேலும் கருப்பு, நீலம், ஊதா நிறங்களில் இந்த அட்டகாசமான சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் கிடைக்கும். அதேபோல் விரைவில் அறிமுகமாகும் சியோமி 13 ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications