Leica கேமரா வசதியுடன் இந்தியாவில் அறிமுகமான புதிய Xiaomi ஸ்மார்ட்போன்: என்ன விலை தெரியுமா?
சியோமி நிறுவனம் தரமான சியோமி 13 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போன் ஸ்னாப்டிரான் சிப்செட், தனித்துவமான கேமரா,பெரிய டிஸ்பிளே எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய சியோமி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.
சியோமி 13 ப்ரோ அம்சங்கள்
சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.73-இனச் 2கே ஒஎல்இடி hyperbolic flexible LTPO டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, டால்பி விஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1900 நிட்ஸ் ப்ரைட்னஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய சியோமி போன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் சிப்செட்
குறிப்பாக சியோமி 13 ப்ரோ ஸமார்ட்போனில் தரமான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரிபிள் ரியர் கேமரா
இந்த புதிய போன் 50எம்பி Sony IMX989 பிரைமரி கேமரா + 50எம்பி Leica டெலிபோட்டோ லென்ஸ் + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

12ஜிபி ரேம் மற்றும் 256 ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது புதிய சியோமி 13 ப்ரோ ஸமார்ட்போன் மாடல். மேலும் ளுபுளு கண் பாதுகாப்பு சான்றிதழுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும்Dolby Atmos ஆதரவுடன் டூயல் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த சியோமி 13 ப்ரோ மாடல்.
4820 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. பின்பு 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், 10 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
டூயல் 5ஜி சிம் ஆதரவு, வைஃபை 7, புளூடூத் வெர்ஷன் 5.3, என்எப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது இன்-டிஸ்பிளே கைரேகை ஸகேனர் வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன விலை
சியோமி 13 ப்ரோ ஸமார்ட்போன் ஆனது ரூ.79,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய போன் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சியோமி நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








