Home
Mobile

இந்த புதிய சியோமி போனை வாங்குற ஆசையே போயிடும்போல... வியக்க வைக்கும் விலை.! விற்பனை தேதி இதுதான்.!

சியோமி நிறுவனம் நேற்று சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போனை மாடலை அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த புதிய சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

என்ன விலை?

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.79,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த சியோமி 13 ப்ரோ மாடலை வாங்கினால் ரூ.10,000 வரை தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் வரும் மார்ச் 6-ம் தேதி விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் உள்ளன.

இந்த புதிய சியோமி போனை வாங்குற ஆசையே போயிடும்போல:வியக்க வைக்கும் விலை!

என்னென்ன அம்சங்கள்?

செராமிக் ஒயிட் மற்றும் செராமிக் பிளாக் நிறங்களில் இந்த சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.73-இனச் 2கே ஒஎல்இடி hyperbolic flexible LTPO டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, டால்பி விஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1900 நிட்ஸ் ப்ரைட்னஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய சியோமி போன் வெளிவந்துள்ளது.

சியோமி 13 ப்ரோ ஸமார்ட்போனில் தரமான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புதிய போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

இந்த புதிய சியோமி போனை வாங்குற ஆசையே போயிடும்போல:வியக்க வைக்கும் விலை!

சியோமி 13 ப்ரோ போன் 50எம்பி Sony IMX989 பிரைமரி கேமரா + 50எம்பி Leica டெலிபோட்டோ லென்ஸ் + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போன்.

12ஜிபி ரேம் மற்றும் 256 ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது புதிய சியோமி 13 ப்ரோ ஸமார்ட்போன் மாடல். மேலும் ளுபுளு கண் பாதுகாப்பு சான்றிதழுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் Dolby Atmos ஆதரவுடன் டூயல் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த சியோமி 13 ப்ரோ மாடல். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

இந்த புதிய சியோமி போனை வாங்குற ஆசையே போயிடும்போல:வியக்க வைக்கும் விலை!

4820 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. பின்பு 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், 10 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

இந்த புதிய சியோமி போனை வாங்குற ஆசையே போயிடும்போல:வியக்க வைக்கும் விலை!

டூயல் 5ஜி சிம் ஆதரவு, வைஃபை 7, புளூடூத் வெர்ஷன் 5.3, என்எப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது இன்-டிஸ்பிளே கைரேகை ஸகேனர் வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது இன்-டிஸ்பிளே கைரேகை ஸகேனர் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் VC லிக்விட் கூலிங் வசதியுடன் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi 13 Pro Smartphone Price and Sale Date Announced: Full Details! : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X