OnePlus-ஐ ஓடவிடப் போகும் வெறித்தமான Xiaomi 13 Pro ரெடி.! எப்போ அறிமுகம் தெரியுமா?
OnePlus நிறுவனம் நேற்று அதன் புதிய OnePlus 11 மற்றும் OnePlus 11R ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து, இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது. இனி சியோமி (Xiaomi) சும்மா இருக்குமா? இருக்காதுல.. எப்படி இருக்கும்?
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி தனது அடுத்த புதிய வரவான, சியோமி 13 ப்ரோ (Xiaomi 13 Pro) ஸ்மார்ட்போனை, வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியாவிலும், உலகளவிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடத் தயாராக இருப்பதாக இப்போது அறிவித்துவிட்டது. இந்த தகவலின் மூலம், புது ஒன்பிளஸ் சாதனத்தை வாங்க ஐடியா வைத்திருந்த மக்களின் மனதில், சியோமி என்ன தரப்போகிறது என்ற எண்ணம் தோன்றிவிட்டது போல் தெரிகிறது.

லேட்டஸ்ட் மாஸ்டர் பீஸ் இது தானாம்.! சியோமி ரெடி செய்யும் வெறித்தமான Xiaomi 13 Pro.!
சியோமி என்று சொன்னாலே, குறைந்த விலையில் டாப் கிளாஸ் அம்சங்கள் என்று தானே பொருள். இதை மக்கள் எப்படி விடுவார்கள். இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் மாடல் உடன் Xiaomi 13 சாதனம் சமீபத்தில் சீனாவில் வெளியிடப்பட்டது என்பது குறிபிடித்தக்கது. பிப்ரவரி 27 ஆம் தேதி தொடங்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2023) இன் போது, நிறுவனம் உலகளவில் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போனை வெளியிடக்கூடும் என்று முந்தைய அறிக்கை சுட்டிக்காட்டியது.
இருப்பினும், இது ஒரு நாள் முன்னதாக சியோமி தனது புதிய போனை அறிமுகம் செய்யவிருப்பதாக இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. Xiaomi 13 Pro வெளியீடு இந்தியாவிலும் உலகெங்கிலும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடக தலங்களான Facebook, YouTube மற்றும் Twitter கணக்குகளில் நேரடியாக லைவ் செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

Xiaomi 13 Pro இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமா? எப்போது?
சியோமி இந்த புதிய ஸ்மார்ட்போனை அதன் "லேட்டஸ்ட் மாஸ்டர்பீஸ் (Latest Masterpiece)" என்று குறிப்பிட்டுள்ளது. இது லைகாவுடன் (Leica) இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. Xiaomi 13 Pro மாடல் சமீபத்தில் இந்திய BIS சான்றிதழில் காணப்பட்டது. இது இந்தியாவில் உடனடி அறிமுகத்தைப் பரிந்துரைக்கிறது. அது மட்டுமின்றி, தாய்லாந்து NBTC சான்றிதழ் இணையதளத்திலும் இந்த ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. நிறுவனத்தின் அறிவிப்புப் படி இது ஒரே நாள் உலகளவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

Xiaomi 13 Pro சிறப்பம்சம்
- 6.73' இன்ச் 2K OLED டிஸ்ப்ளேவுடன்
- 120Hz ரெப்ரெஷ் ரேட் 1900 nits பீக் பிரைட்னஸ் (HDR10+)
- 50MP பிரைமரி கேமரா
- 50MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார்
- 50MP டெலிஃபோட்டோ சென்சார்
- லைக்கா-பொருத்தப்பட்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 32எம்பி செல்பி கேமரா
- Qualcomm Snapdragon 8 Gen 2 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 கஸ்டம் ஸ்கின்
- 120W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 50W வயர்லெஸ் சார்ஜிங்
- 4,820mAh பேட்டரி
- 5G
- 4G LTE
- Wi-Fi 6
- USB டைப்-சி போர்ட்
- ப்ளூடூத் 5.3
- NFC, GPS, NFC
Xiaomi 13 Pro ஸ்மார்ட்போனின் விலை என்ன?
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Xiaomi 13 Pro ஸ்மார்ட்போனின் 8ஜிபி+128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை CNY 4,999 ஆகும். இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ. 59,200 ஆகும். இதன் 8GB+256GB, 12GB+256GB, மற்றும் 12GB+512GB மாடல்கள் முறையே, இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 64,000, ரூ. 68,700 மற்றும் ரூ. 74,600 விலையில் அறிமுகமாகலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








