அப்படி போடு! ரூ.10,000 ஆஃபர் விலையில் Xiaomi 13 Pro விற்பனை ஆரம்பம்.. கண்ணை மூடி வாங்க 3 காரணங்கள்!
சியோமி 13 ப்ரோவின் ( Xiaomi 13 Pro) இந்திய விற்பனை இன்று முதல், அதாவது மார்ச் 6 முதல் தொடங்கியுள்ளது. சியோமியின் இந்த லேட்டஸ்ட் பிரீமியம் போனை நம்பி வாங்கலாமா? வேண்டாமா? இதன் அசல் விலை என்ன? ஆஃபர் விலை என்ன? இதோ விவரங்கள்:
முதலில் சியோமி 13 ப்ரோவின் அசல் விலை மற்றும் ஆரம்ப விற்பனையின் ஒரு பகுதியாக கிடைக்கும் தள்ளுபடி மற்றும் சலுகைகளை பற்றி பார்த்து விடலாம். பின்னர் இந்த போனை ஏன் நம்பி வாங்கலாம் என்பதற்கான 3 காரணங்களையும், ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் என்பதற்கான 2 காரணங்களையும் பற்றி பார்க்கலாம்.

சியோமி 13 ப்ரோ இந்திய விலை
சியோமி 13 ப்ரோவின் இந்திய விலை ரூ.79,999. ஆனால் இதை ரூ.69,999 க்கு வாங்கலாம். இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜும் விலையாகும். இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று (மார்ச் 6) மதியம் 12 மணி முதல் தொடங்கியது. இது எம்ஐ.காம் (Mi.com), தேர்ந்தெடுக்கப்பட்ட எம்ஐ ஹோம்ஸ் (Mi Homes) மற்றும் எம்ஐ ஸ்டூடியோஸ் (Mi Studios) வழியாக வாங்க கிடைக்கிறது.
சியோமி 13 ப்ரோ ஆஃபர் விலை
ஆரம்பகால விற்பனையின் ஒரு பகுதியாக, சியோமி 13 ப்ரோ மீது ரூ.10,000 என்கிற உடனடி தள்ளுபடி அணுக கிடைக்கிறது. ஆனால் இது ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த போனின் மீது ரூ.8,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும், பழைய சியோமி அல்லது ரெட்மி போன்களுக்கு ஸ்பெஷலாக ரூ.12,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி 13 ப்ரோ முக்கிய அம்சங்கள்
சற்றே தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ள சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் 2கே டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸர், 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,820mAh பேட்டரி, 5ஜி ஆதரவு, 50 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
சியோமி 13 ப்ரோவை நம்பி வாங்க 3 காரணங்கள்
முதல் காரணம்: தரமான கேமராக்கள்! இது கூகுள் பிக்சல் 7 சீரிஸ், சாம்சங் கேலக்ஸி எஸ் 23 சீரிஸ் மற்றும் ஐபோன் 14 சீரிஸ்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் அளவிற்கு மிகவும் திறமையாக ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. கேமராக்கள் தான் உங்கள் முன்னுரிமை என்றால், சியோமி 13 ப்ரோவை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்!
இரண்டாவது காரணம்: சாலிட் ஆன பெர்ஃபார்மென்ஸ்! இதனுள் உள்ள ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸருக்கு நன்றி! மூன்றாவது காரணம்: அதிவேகமான மற்றும் பிரகாசமான டிஸ்பிளே! 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளேயுடன் வரும் சியோமி 13 ப்ரோவின் டிஸ்பிளேவானது ஆப்பிள் ஐபோன் 14-ஐ விட பிரகாசமாக இருக்கிறது.
சியோமி 13 ப்ரோவை வாங்காமல் தவிர்க்க 2 காரணங்கள்
முதல் காரணம் - அதிகப்படியான விலை! உண்மையிலேயே சியோமி 13 ப்ரோவின் இந்திய விலை நிர்ணயம் சற்றே அதிகமாக உள்ளது. இரண்டாவது காரணம் - வழக்கமான 32எம்பி செல்பீ கேமரா! சில போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது சியோமி 13 ப்ரோவில் உள்ள 32எம்பி செல்பீ கேமராவானது சிறந்ததாக இல்லை. இது இன்னும் கொஞ்சம் மேம்படுத்தப்பட்டு இருக்கலாம்!


Click it and Unblock the Notifications








