Home
Mobile

டிசம்பர் 26: ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் சியோமி 12எக்ஸ் ஸ்மார்ட்போன்.!

சியோமி நிறுவனம் வரும் டிசம்பர் 26-ம் தேதி புதிய சியோமி 12எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி 12எக்ஸ்

சியோமி 12எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.28-இன்ச் AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். குறிப்பாக120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைகொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

 12எக்ஸ் ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம்

சியோமி 12எக்ஸ் ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

சியோமி 12எக்ஸ்

சியோமி 12எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ
கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பிகேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்தஅம்சங்கள் உள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி

இந்த சியோமி 12எக்ஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாக பயன்படும். குறிப்பாக இந்த சிப்செட் வேகமாக செயல்படும். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

 4500 எம்ஏஎச் பேட்டரி

சியோமி 12எக்ஸ் ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த சாதனத்தை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். குறிப்பாக இந்த சாதனம் கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது.

4ஜி வோல்ட்இ, வைஃபை

இரட்டை சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை 5,புளூடூத்இஜிபிஎஸ்இ என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.சியோமி நிறுவனம் அடுத்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே பல நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.

சியோமி 11 Youth Vitality Edition

சியோமி 11 Youth Vitality Edition

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகாப் பார்ப்போம்.சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

யோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன்

சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

யோமி 11 Youth Vitality Edition பின்புறம் 64எம்பி

சியோமி 11 Youth Vitality Edition பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

சியோமி 11 Youth Vitality Editionஆனது 8ஜிபி ரேம்

சியோமி 11 Youth Vitality Editionஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன் 4250 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 33Wh பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Xiaomi 12X with 50 Mega Pixel Camera Launching in China on December 26: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X