Xiaomi 12டி, 12டி ப்ரோ போன்களின் வெளியீட்டு தேதி: ஆர்வமுடன் காத்திருக்கும் மக்கள்.!
Xiaomi 12T மற்றும் Xiaomi 12T Pro ஸ்மார்ட்போன்கள் வரும் அக்டோபர் 4-ம் தேதி அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்த சியோமி ஸ்மார்ட்போன்களுடன் ரெட்மி பேட் எனும் டேப்லெட் மாடலும் அறிமுகம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பா இந்த ஸ்மார்ட்போன்கள் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்தஸ்மார்ட்போன்களின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி 12டி ப்ரோ
சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போன் 200எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 120W பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

சியோமி 12டி ப்ரோ டிஸ்பிளே
சியோமி 12டி ப்ரோ ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் களமிறங்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போன்.

சியோமி 12டி ப்ரோ சிப்செட்
சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும்என்று கூறப்படுகிறது. எனவே இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி 12டி
சியோமி 12டி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 8100 சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் மீடியாடெக் சிப்செட் உடன் Mali G610 GPU ஆதரவும் உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி 12டி ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி 12டி டிஸ்பிளே
சியோமி 12டி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 2712 x 1220 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். சியோமி 12டி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

சியோமி 12டி கேமரா
சியோமி 12டி ஸ்மார்ட்போன் ஆனது 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுளளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி 12டி ஸ்மார்ட்போன் மாடல்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications