வீழ்வேனென்று நினைத்தாயோ! சரிந்து வரும் நேரத்தில் இப்படி ஒரு ஸ்மார்ட்போனை அறிவித்த Xiaomi..

|

Xiaomi நிறுவனம் சியோமி 12டி மற்றும் 12டி ப்ரோ ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் முதன்மை தர ஸ்மார்ட்போன்களாக அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஒவ்வொரு அம்சமும் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது.

சியோமி 12டி சீரிஸ் அறிமுகம்..

சியோமி 12டி சீரிஸ் அறிமுகம்..

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமித்த நிறுவனங்களில் சியோமி பிரதான ஒன்று. இந்த நிறுவனம் சமீப காலமாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் சியோமி ஒரு அட்டகாசமான ப்ரீமியம் ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. அது சியோமி 12டி சீரிஸ் ஆகும். சியோமியின் 12டி சீரிஸ் இல் இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளன.

ஒரே சீரிஸ் இல் வெவ்வேறு சிப்செட்கள்..

ஒரே சீரிஸ் இல் வெவ்வேறு சிப்செட்கள்..

சியோமி 12டி சீரிஸ் இல் சியோமி 12டி மற்றும் சியோமி 12டி ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளது.

இதில் சியோமி 12டி ஆனது மீடியாடெக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.அதேபோல் சியோமி 12டி ப்ரோ குவால்காம் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

ப்ளாக்ஷிப் பிரிவில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு குறிப்பிட்டத்தக்க அம்சங்கள் இருக்கிறது.

Xiaomi 12T சிறப்பம்சங்கள் மற்றும் விலை

Xiaomi 12T சிறப்பம்சங்கள் மற்றும் விலை

Xiaomi 12T ஸ்மார்ட்போனானது MediaTek Dimensity 8100-Ultra chipset மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.67 இன்ச் 120Hz HDR10+ CrystalRes AMOLED டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது.

AdaptiveSync மற்றும் Adaptive Reading mode போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த டிஸ்ப்ளேயில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளியாகி உள்ளது.

108 எம்பி பிரைமரி கேமரா..

108 எம்பி பிரைமரி கேமரா..

சியோமி 12டி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதன் பின்புறத்தில் 108 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் மிகப்பெரிய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இடம்பெற்றுள்ளது.

சியோமி 12டி இன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை EUR 599 (தோராயமாக ரூ.48,654) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Xiaomi 12T Pro சிறப்பம்சங்கள்

Xiaomi 12T Pro சிறப்பம்சங்கள்

Xiaomi 12T Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். மேலே குறிப்பிட்ட பக்கா ப்ரீமியம் ஸ்மார்ட்போன் இதுதான்.அம்சங்களை முழுமையாக பார்த்தால் உங்களுக்கே புரியும்.

சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

சியோமி 12டி ப்ரோ அம்சங்கள்

சியோமி 12டி ப்ரோ அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனானது 6.67 இன்ச் 120Hz HDR10+ CrystalRes AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என உச்சபட்ச வேரியண்ட் உடன் மூன்று வகைகளில் கிடைக்கிறது.

8K வீடியோ பதிவு ஆதரவு..

8K வீடியோ பதிவு ஆதரவு..

சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 8 எம்பி அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் பிரதான கேமராவாக 200 எம்பி பிரதான கேமரா இடம்பெற்றிருக்கிறது.

இதில் 8K தரத்தில் வீடியோ பதிவு ஆதரவைக் கொண்டுள்ளது.

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இதன் சார்ஜிங் அம்சம் மிகவும் மேம்பட்டதாக இருக்கிறது.

இதில் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. இதன் அடிப்படை மாறுபாட்டின் விலை EUR 749 (தோராயமாக ரூ.60,767) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை சியோமி தெளிவுப்படுத்தவில்லை.

Best Mobiles in India

English summary
Xiaomi 12T Series Launched Globally With 200MP Camera, 120W Charging and More: Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X