200எம்பி மெயின் கேமராவுடன் களமிறங்கும் Xiaomi 12டி ப்ரோ.! எப்போது அறிமுகம் தெரியுமா?
சியோமி நிறுவனம் வரும் செப்டம்பர் மாதம் சியோமி 12டி ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 200எம்பி கேமராவுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சியோமி 12டி ப்ரோ
குறிப்பாக இந்த சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது
ஆன்லைனில் கசிந்த இந்த சியோமி போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

200எம்பி கேமரா
சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போன் 200எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போன்.

அருமையான சிப்செட்
புதிய சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும்என்று கூறப்படுகிறது. எனவே இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போன்.
மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சியோமி போன்.

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
புதிய சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் களமிறங்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி
விரைவில் அறிமுகமாகும் சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 120W பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் விரைவில் சார்ஜ் செய்ய முடியும். அதேபோல்
இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி
5ஜி, வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.
குறிப்பாக இந்த சியோமி போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும். அதேபோல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போன்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








