3 நாள் மட்டும் காத்திருங்கள்.. 200 எம்பி கேமரா உடன் அறிமுகமாகும் Xiaomi ஸ்மார்ட்போன்!

|

கடந்த சில காலமாகவே சியோமி நிறுவனத்தின் 200 எம்பி கேமரா ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களும் கசிவுகளும் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்றை உறுதிப்படுத்தியுள்ளது.

200MP கேமரா சென்சார்..

200MP கேமரா சென்சார்..

சியோமி நிறுவனத்தின் Xiaomi 12T Pro ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குறித்த தகவல் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்தது. இந்த நிலையில் Xiaomi 12T Pro ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனானது 200MP கேமரா சென்சார் உடன் வெளியாகும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மூலம் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

இறுதியாக நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் Xiaomi 12T Pro ஸ்மார்ட்போன் அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்பதையும் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

Xiaomi 12T Pro: கேமரா அம்சங்கள்

Xiaomi 12T Pro: கேமரா அம்சங்கள்

Xiaomi 12T Pro ஆனது ஜூன்/ஜூலை 2022 இல் "Diting" மற்றும் "220121UG" என்ற குறியீட்டுடன் முதன்முதலில் காணப்பட்டது.

IMEI தரவுத்தளம், FCC உள்ளிட்ட பல சான்றிதழ் இணையதளங்களில் இது காணப்பட்டது. இதில் இந்த ஸ்மார்ட்போன் 200எம்பி கேமரா கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது இதை நிறுவனம் உறுதி செய்துள்ளது.

அதீத கேமரா அம்சங்கள்..

அதீத கேமரா அம்சங்கள்..

நிறுவனம் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் மெகாபிக்சல் உடன் சென்சார் விவரத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது.இது 200MP சாம்சங் ISOCELL HP1 சென்சார் ஆகும்.

இதன்மூலம் 12.5MP மற்றும் 50MP தீர்மானங்களில் புகைப்படங்களை பதிவு செய்ய முடியும்.

8K வீடியோ பதிவு திறன்கள்..

8K வீடியோ பதிவு திறன்கள்..

சியோமியின் இந்த சென்சார் ஆனது காட்சிகள் மற்றும் வீடியோக்களை மேம்படுத்தி வழங்கும் வகையில் OIS உடன் இணைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இரவு நேர காட்சி பதிவை மேம்படுத்த இந்த OIS உதவும்.

8K வீடியோ பதிவு திறன்களை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் இடம்பெறும் துணை கேமராக்கள் குறித்த விவரங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் இதில் 8 எம்பி அல்ட்ராவைட் ஸ்னாப்பர் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் இடம்பெறும் என கூறப்படுகிறது.

Xiaomi 12T Pro: அம்சங்கள்

Xiaomi 12T Pro: அம்சங்கள்

Xiaomi 12T Pro ஆனது, Redmi K50 அல்ட்ராவில் உள்ளதை போன்றே 1.5K தெளிவுத்திறனுடன் கூடிய 6.67-இன்ச் OLED பேனல் கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இது 4nm ஃபேப்ரிகேஷன் செயல்முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் தான் சமீபத்திய அனைத்து ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.

சாம்சங் அறிமுகம் செய்த ரூ.1 லட்சம் விலைப்பிரிவு ஸ்மார்ட்போனில் கூட இந்த சிப்செட் தான் பொருத்தப்பட்டிருக்கிறது.

120 வாட்ஸ் ஹைப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

120 வாட்ஸ் ஹைப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

Xiaomi 12T Pro ஸ்மார்ட்போனானது 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போன் 120 வாட்ஸ் ஹைப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி இணைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனானது க்ளியர் ப்ளூ, காஸ்மிக் பிளாக் மற்றும் லூனார் சில்வர் ஆகிய வண்ண விருப்பங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

3 நாட்கள் மட்டும் காத்திருங்கள்..

3 நாட்கள் மட்டும் காத்திருங்கள்..

200 எம்பி கேமரா, அக்டோபர் 4 அறிமுகம் என்பதை தவிர வேறு எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஸ்மார்ட்போன் அறிமுகத்தின் போது அதிகாரப்பூர்வ தகவலும் விலையும் அறிவிக்கப்படும். சிறந்த கேமரா அம்சத்துடன் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் இன்னும் 3 தினங்கள் மட்டும் காத்திருங்கள். காரணம் அக்டோபர் 4 ஆம் தேதி மேம்பட்ட கேமரா அம்சங்கள் உடன் ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகமாவது உறுதி.

Best Mobiles in India

English summary
Xiaomi 12T Pro Smartphone Set to Launch on October 4 With 200MP Camera

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X