விரைவில் அறிமுகமாகும் சியோமி 12டி ப்ரோ, ரெட்மி பேட்.! வாங்கத் தூண்டும் அம்சங்கள்
சியோமி நிறுவனம் விரைவில் சர்வதேச சந்தையில் புதிய சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சியோமி 12டி ப்ரோ - ரெட்மி பேட்
அதேபோல் இந்த சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போன் உடன் ரெட்மி பேட் எனும் டேப்லெட் மாடலும் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த இரண்டு சாதனங்களின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி 12டி ப்ரோ அம்சங்கள்
Xiaomi 12T Pro ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும்
என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் சிப்செட் என்பதால் இந்த போனை நம்பி வாங்கலாம். அதாவது மேம்பட்ட ஜிபியு மற்றும்சிபியு அம்சத்தை வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்.
அதேபோல் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போன்
மாடல்.

அருமையான டிஸ்பிளே
சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போனில் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், டால்பி விஷன் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது சியோமி 12டி ப்ரோ.

அசத்தலான கேமரா
சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போன் 200எம்பி சாம்சங் எச்பி1 பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

அட்டகாசமான பேட்டரி
சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 120W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும் சார்ஜ்பற்றிய கவலை இருக்காது.

256ஜிபி ஸ்டோரேஜ்
இந்த சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த சியோமிஸ்மார்ட்போன்.

ரெட்மி பேட்
ரெட்மி பேட் ஆனது 10.1-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 2000 x 1200 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு
அம்சங்களுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான டேப்லெட்.
அதேபோல் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி டேப்லெட். பின்பு 7800 எம்ஏஎச் பேட்டரி
ஆதரவுடன் இந்த அட்டகாசமான ரெட்மி டேப்லெட் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications