புகைப்பட பிரியர்களுக்கு விருந்து: 200 எம்பி கேமரா உடன் Xiaomi ஸ்மார்ட்போன், Redmi பேட்!

|

Xiaomi 12T ப்ரோ மீண்டும் ஒரு 200 எம்பி கேமரா அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு ரெட்மி பேட் இன் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது. Xiaomi 12T Pro ஸ்மார்ட்போனானது ரெட்மி கே50 எஸ் ப்ரோவின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

வெளியான தகவலின்படி சியோமி மற்றொரு பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஒரே மாதிரியான கேமரா வடிவமைப்பு

ஒரே மாதிரியான கேமரா வடிவமைப்பு

சியோமி 12டி ப்ரோ மற்றும் ரெட்மி பேட் ஆகிய சாதனங்கள் குறித்த தகவல் டிப்ஸ்டர் தகவல் மூலம் கசிந்துள்ளது.

சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போன் மற்றும் ரெட்மி பேட் ஆகிய இரண்டு சாதனங்களும் ஒரே மாதிரியான கேமரா தொகுதிகளைக் கொண்டிருக்கும் என வெளியான புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

200 எம்பி பிரதான கேமரா

200 எம்பி பிரதான கேமரா

இதில் சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போன் 200 எம்பி பிரதான சென்சாரைக் கொண்டிருக்கும் எனவும் ரெட்மி பேட் 8 எம்பி முதன்மை கேமராவைக் கொண்டிருக்கும் எனவும் டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. இந்த இரண்டு சாதனங்களும் பல சான்றிதழ் இணையதளங்களில் காணப்படுகின்றன. 12டி ப்ரோ குறித்த தகவல் கடந்த சில நாட்களாகவே ஒவ்வொன்றாக கசிந்துக் கொண்டிருக்கிறது.

ரெட்மி பேட் எப்படி இருக்கும்?

ரெட்மி பேட் எப்படி இருக்கும்?

தற்போது இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல் டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் மூலம் பகிரப்பட்டுள்ளது. 200 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் பெயர் Xiaomi 12T Pro என தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரெட்மி பேட் பெயர் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இரண்டு மாடல்களும் ஒரே மாதிரியான கேமரா வடிவமைப்புகளைக் கொண்டிருக்கிறது.

கேமரா மாட்யூல் மற்றும் வடிவமைப்பு

கேமரா மாட்யூல் மற்றும் வடிவமைப்பு

சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் செவ்வக மாட்யூல் வடிவமைப்புடன் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த செவ்வக வடிவத்தின் மேற்புறத்தில் பெரிய கேமராவும் கீழ் வலது புறத்தில் இரண்டு கேமராக்களும் இருக்கிறது. அதேபோல் கீழ் இடது புறத்தில் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு இருக்கிறது.

ரெட்மி பேட் இதேபோன்ற கேமரா வடிவமைப்பைக் கொண்டிருந்தாலும் இதில் எல்இடி ஃப்ளாஷ் இருக்காது என தகவல்கள் தெரிவிக்கிறது.

வெளியான புகைப்படத்தின் படி சியோமி 12டி ப்ரோ ஆஷ் வண்ண விருப்பத்தில் வெளியாகலாம். அதேபோல் ரெட்மி பேட் வைட் வண்ண விருப்பத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ரெட்மி கே50எஸ் ப்ரோ இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பா?

ரெட்மி கே50எஸ் ப்ரோ இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பா?

ரெட்மி பேட் ஆனது 8 எம்பி பிரதான கேமராவைக் கொண்டிருக்கும் எனவும் சியோமி 12டி ப்ரோ 200 எம்பி முதன்மை கேமராவைக் கொண்டிருக்கும் எனவும் முன்னதாக வெளியான டிப்ஸ்டர் தகவல் தெரிவித்தது.

அதேபோல் சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போனானது ரெட்மி கே50எஸ் ப்ரோ இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்மார்ட்போனின் விலை என்ன?

ஸ்மார்ட்போனின் விலை என்ன?

சீனாவின் 3சி சான்றிதழ் மூலம் வெளியான தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் எஸ்ஓசி ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியாகும் பெரும்பாலான ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் இதே சிப்செட் தான் பொருத்தப்பட்டுள்ளது. இதை வைத்தே இந்த ஸ்மார்ட்போனின் விலையை கணித்துவிடலாம் அதிகமாகதான் இருக்கும் என்று.

இந்த ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவைக் கொண்டிருக்கும் என்பது இந்த சிப்செட்டை வைத்து முடிவு செய்துவிடலாம்.

மீடியாடெக் ஹீலியோ ஜி99 SoC

மீடியாடெக் ஹீலியோ ஜி99 SoC

அதேபோல் Redmi Pad குறித்து பார்க்கையில், இது 4ஜி ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இந்த மாடல் ஹூட்டின் கீழ் மீடியாடெக் ஹீலியோ ஜி99 SoC ஆதரவைக் கொண்டிருக்கும் என்றும் 7800 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதனுடன் மற்றொரு ரெட்மி டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி பேட் 5 குறித்த தகவல்

ரெட்மி பேட் 5 குறித்த தகவல்

இந்தியாவில் அறிமுகமாகும் மற்றொரு டேப்லெட் ரெட்மி பேட் 5 ஆக இருக்கலாம்.

இந்த டேப்லெட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765G SoC ஆதரவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த டேப்லெட் 11 இன்ச் அளவு டிஸ்ப்ளே உடன் 2.5K+ (2,560x1,600 பிக்சல்கள்) ஆதரவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

அதேபோல் 8720 எம்ஏஎச் பேட்டரி உடன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை இந்த பேட் 5 கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
xiaomi 12T Pro, Redmi Pad Images Leak: Might be Launched with 200MP Camera

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X