Home
Mobile

உங்க கெத்த காட்ட வேண்டிய நேரம் வந்துடுச்சு.! முடிஞ்சா இந்த போனை எப்படியாவது வாங்கிடுங்க.!

Xiaomi இன்று அதன் புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை புகைப்பட விபரங்களுடன் வெளியிட்டு, உலக ஸ்மார்ட்போன் ரசிகர்களை டீஸ் செய்துள்ளது. சியோமி 12T ப்ரோ டேனியல் ஆர்ஷம் எடிஷன் (Xiaomi 12T Pro Daniel Arsham Edition) என்ற பெயரில் ஒரு சிக்னேச்சர் சிற்ப வடிவமைப்புடன் புதிய ஸ்மார்ட்போன் டிவைஸை நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ளது.

கலை நுணுக்கங்களுடன் உருவாக்கப்பட்ட புதிய Xiaomi 12T Pro Special Edition

கலை நுணுக்கங்களுடன் உருவாக்கப்பட்ட புதிய Xiaomi 12T Pro Special Edition

இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் (Xiaomi Special Edition Smartphone) ஆனது, இதற்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி இன் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை போலவே, இதுவும் ஸ்பெஷல்லி மேட் ஸ்மார்ட்போன் பாகங்களுடன், பேக்கேஜிங் முதல் சார்ஜ்ர் ஹெட் வரை எல்லாமே தனித்தனியாகச் சிறப்புக் கவனத்துடன், கலை நுணுக்கங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கே இதன் லுக் கண்களை கவர்கிறது.

ஏன் இந்த ஸ்பெஷல் எடிஷன் போனை வாங்கினால் கெத்து தெரியுமா?

ஏன் இந்த ஸ்பெஷல் எடிஷன் போனை வாங்கினால் கெத்து தெரியுமா?

இந்த புதிய Xiaomi 12T Pro Daniel Arsham Edition போனின் யூசர் இன்டெர்பெஸ் கூட பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் (Xiaomi 12T Pro Daniel Arsham Edition) மாடல் உலகளவில் வெறும் 2,000 யூனிட்டுகளுக்கு மட்டுமே கிடைக்குமென்று நிறுவனம் அறிவித்துள்ளது. ஆம், இந்த 2000 யூனிட்டில் இருந்து உங்களுக்கான 1 யூனிட்டை பெற்றால், நீங்கள் செம கெத்து தானே.!

Xiaomi 12T Pro Daniel Arsham Edition ஸ்மார்ட்போனின் முன் பதிவு எப்போது துவங்குகிறது?

Xiaomi 12T Pro Daniel Arsham Edition ஸ்மார்ட்போனின் முன் பதிவு எப்போது துவங்குகிறது?

இந்த வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான ஸ்பெஷல் எடிஷன் Xiaomi 12T Pro Daniel Arsham Edition ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் சியோமி ரசிகர்கள் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் ப்ரீ புக்கிங் செய்துகொள்ளலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

அதான் பாஸ், விற்பனைக்கு முன்பாகவே நீங்கள் முன்பதிவு செய்து, உங்களுக்கான Xiaomi 12T Pro Daniel Arsham Edition யூனிட்டை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

இந்த போனை செதுக்கி-செதுக்கி உருவாக்கியவர் யார் தெரியுமா?

இந்த போனை செதுக்கி-செதுக்கி உருவாக்கியவர் யார் தெரியுமா?

Xiaomi 12T Pro Daniel Arsham Edition என்ற பெயர் குறிப்பிடுவது போல, புதிய Xiaomi 12T ப்ரோ மாடல் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த சமகால கலைஞரான டேனியல் அர்ஷாம் உடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர்ஷம் அவரது படிகப்படுத்தப்பட்ட போகிமொன் (Pokémon) சிற்பங்களிலிருந்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெஷல் எடிஷன் போனில் பச்சை நிறப் படிகத்துடன் வெண்கலப் படிகங்களா?

ஸ்பெஷல் எடிஷன் போனில் பச்சை நிறப் படிகத்துடன் வெண்கலப் படிகங்களா?

இவருடன் சியோமி நிறுவனம் கூட்டு சேர்த்து தான் இந்த புதிய Xiaomi 12T Pro Daniel Arsham Edition மாடலை உருவாக்கியுள்ளது. இது "செயல்பாட்டு பொருளாக வெளியில் ஒரு நோக்கத்துடன் கூடிய சிற்பமாக" வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனம் வெண்கலப் படிகங்களுடன், பச்சை நிறப் படிகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போனை வாங்கியவர் இதை என்ன செய்யலாம்?

20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போனை வாங்கியவர் இதை என்ன செய்யலாம்?

Xiaomi 12T Pro Daniel Arsham Edition போனில் உள்ள படிகங்கள் துருத்திக் கொள்ளாவிட்டாலும், இதன் பூச்சு மற்றும் பாட்டினாவின் பாகங்களில் அச்சிடப்பட்ட ரத்தினங்கள் அவற்றை மிகவும் உறுதியானதாகக் காட்டுகின்றது. 20 ஆண்டுகளில், இந்த ஃபோனை வைத்திருப்பவர்கள் இதை ஒரு ஸ்மார்ட்போனாக பயன்படுத்துகிறாரோ இல்லையோ.!

ஒரே இடத்தில வச்சு அழகு பாருங்க.!

ஒரே இடத்தில வச்சு அழகு பாருங்க.!

கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட தருணத்திற்கு பிறகு, அதன் செயல்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு சிற்பப் பொருளாகவோ அல்லது இதை ஒரு கலை பொக்கிஷமாகவோ பயன்படுத்துவார்கள் என்று கலைஞர் டேனியல் கூறுகிறார். சிற்ப கலைஞரால் உருவாக்கப்பட்டதனால் இதை சிற்பமாக வைத்து அழகு பார்க்கவும் வாய்ப்புள்ளது என்கிறார் டேனியல்.

Xiaomi 12T Pro Daniel Arsham Edition ஸ்மார்ட்ஃபோனில் - அர்ஷமின் தீம் ஆப் ஏரோஷன்

Xiaomi 12T Pro Daniel Arsham Edition ஸ்மார்ட்ஃபோனில் - அர்ஷமின் தீம் ஆப் ஏரோஷன்

இந்த Xiaomi 12T Pro Daniel Arsham Edition சாதனத்தின் UI ஐயும் நிறுவனம் தனிப்பயனாக்கியுள்ளது. இது ஒரு கண்டெம்ப்ரரி தோற்றத்தை அளிக்கிறது. இந்த Xiaomi 12T Pro Daniel Arsham Edition ஸ்மார்ட்ஃபோனில் தனிப்பயனாக்கப்பட்ட கைரோஸ்கோபிக் வால்பேப் கூட வழங்கப்பட்டுள்ளது. இது அர்ஷமின் தீம் ஆப் ஏரோஷன் (Arsham's theme of erosion) என்று கூறப்படுகிறது.

Xiaomi 12T Pro Daniel Arsham Edition போனின் விலை என்ன தெரியுமா?

Xiaomi 12T Pro Daniel Arsham Edition போனின் விலை என்ன தெரியுமா?

3D விளைவுகளுடன் இந்த வால்பேப்பர் மெதுவாக மாறுகிறது. Xiaomi 12T Pro Daniel Arsham பதிப்பின் விலை சுமார் $ 932 டாலர்களாகும். இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ. 76107 என்ற விலையை நெருங்குகிறது. டிசம்பர் 5 முதல் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கும். இது டிசம்பர் 16 முதல் விற்பனைக்கு வரும். இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால்?

எங்கிருந்து இந்த Xiaomi 12T Pro ஸ்பெஷல் எடிஷன் போனை வாங்கலாம்?

எங்கிருந்து இந்த Xiaomi 12T Pro ஸ்பெஷல் எடிஷன் போனை வாங்கலாம்?

இந்த ஸ்பெஷல் எடிஷன் போன் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயினில் மட்டுமே விற்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். ஆனால், ஆர்வமுள்ள வாசகர்கள் Mi.com இலிருந்து சாதனத்தை வாங்க முடியும். உங்களுக்கு தெரிந்த நம்பர் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் ட்ரிக்ஸ்களை வைத்து ஆசை இருந்தால் ட்ரை செய்து இந்த போனை வாங்கி பாருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 12T Pro Daniel Arsham Edition Pre-Order and Sales Date Announced To Go Live From December 5
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X