காத்திருப்பு வீண் போகல: Xiaomi ரசிகர்களுக்கு விரைவில் ஒரு ட்ரீட், ரெடியா இருங்க!

|

Xiaomi தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஒரு ஸ்மார்ட்போனை எந்தளவு நுணுக்கமாக வடிவமைக்க முடியுமோ அந்தளவிற்கு நுணுக்கமாக இந்த ஸ்மார்ட்போனை வடிவமைத்துள்ளது சியோமி நிறுவனம்.

Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC சிப்செட் ஆதரவு

Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC சிப்செட் ஆதரவு

Xiaomi 12S Ultra ஸ்மார்ட்போனானது, மிகவும் சமீபத்திய முதன்மை ரக Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC சிப்செட் உடன் வெளியாக இருக்கிறது. மேம்பட்ட ஸ்மார்ட்போனின் மூலம் Xiaomi தனது ரசிகர்களுக்கு ஒரு விருந்தையே வைக்க இருக்கிறது என்பது இதன்மூலம் உறுதியாகி உள்ளது.

லைகா சம்மிக்ரான் லென்ஸ் அமைப்புடன் கேமரா லென்ஸ்

லைகா சம்மிக்ரான் லென்ஸ் அமைப்புடன் கேமரா லென்ஸ்

சியோமி நிறுவனம் முதன்மை ரக மேம்பட்ட Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC உடனான ஒரு புது ஸ்மார்ட்போனை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது 6.73 இன்ச் LTPO 2.0 AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 2கே தெளிவுத்திறன் மற்றும் 120Hz ரெஃப்ரஷிங் ரேட்டிங் ஆதரவைக் கொண்டிருக்கலாம்.

இந்த ஸ்மார்ட்போனானது லைகா சம்மிக்ரான் லென்ஸ் அமைப்புடனான 50MP டிரிபிள் ரியர் கேமரா இடம்பெற்றிருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

சர்வதேச சந்தையில் அறிமுகமாக வாய்ப்பு

சர்வதேச சந்தையில் அறிமுகமாக வாய்ப்பு

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட Xiaomi 12S அல்ட்ரா கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 12S தொடரின் புதிய மற்றும் முதன்மை ரக ஸ்மார்ட்போன் ஆகும்.

ஆனால் இது சீனாவில் மட்டுமே வெளியானது எனவே பிற நாட்டு சியோமி ரசிகர்கள் இந்த ஸ்மார்ட்போனின் உலகளாவிய அறிவிப்புக்கு காத்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டிப்ஸ்டர் மூலம் வெளியான தகவல்

டிப்ஸ்டர் மூலம் வெளியான தகவல்

இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல் டிப்ஸ்டர் முகுல் ஷர்மா மூலம் வெளியிடப்பட்டுள்ளது. Xiaomi 12S அல்ட்ராவை சர்வதேச சந்தையில் வெளியிடுவதற்கு Xiaomi தயாராகி இருக்கலாம் முகுல் ஷர்மா ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த மாடலை சியோமி நிறுவனம் கடந்த மாதம் தொடக்கத்தில் தனது சொந்த நாட்டு சந்தையில் மட்டுமே அறிமுகம் செய்தது.உலகளவில் இதே மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

உறுதிப்படுத்தும் வகையில் சில தகவல்

உறுதிப்படுத்தும் வகையில் சில தகவல்

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும் உலகளவில் அறிமுகமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சில தகவல் வெளியாகி வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. ஸ்மார்ட்போன் அறிமுகத்தை எந்தவித ஆதாரப்பூர்வ தகவலையும் வைத்து உறுதிப்படுத்த முடியவில்லை, அதாவது உலகளாவிய மாதிரி எண் என எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

Xiaomi 13 சீரிஸ் விரைவில் அறிமுகம்

Xiaomi 13 சீரிஸ் விரைவில் அறிமுகம்

Xiaomi 13 சீரிஸ் இன்னும் சில மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் 12S அல்ட்ரா குறித்து தகவல் வெளியாகி வருகிறது.

எது எப்படியோ., சியோமி ரசிகர்களுக்கு ஒரு ஸ்மார்ட்போன் ட்ரீட் இருக்கிறது என்பது உறுதி ஆகும்.

50MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

50MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

Xiaomi 12S அல்ட்ரா ஸ்மார்ட்போனானது முதன்மை தர Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC உடன் வெளியாகலாம். இது சமீபத்திய மற்றும் மேம்பட்ட சிப்செட் மாடலாகும்.

இந்த ஸ்மார்ட்போனில் 2K தெளிவுத்திறன் மற்றும் 120Hz ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.73-இன்ச் LTPO 2.0 AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

லைகா சம்மிக்ரான் லென்ஸ் ஆதரவுடன் கூடிய 50MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் பட்சத்தில், இதன் அடிப்படை விலை ரூ.70,000 என்ற பிரிவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ

Xiaomi 12S அல்ட்ரா, உலகளாவிய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை.

இருப்பினும் சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் நவம்பர் 2022 இல் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த சியோமி 13 சீரிஸ் ஸ்மார்ட்போனில் சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ என இரண்டு மாடல்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi 12S Ultra Will be Launching Soon in Globally

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X